18 Years Of Pudhupettai: தனுஷ் நடிப்பில் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம்.. 18 ஆண்டுகளைத் தொட்ட புதுப்பேட்டை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  18 Years Of Pudhupettai: தனுஷ் நடிப்பில் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம்.. 18 ஆண்டுகளைத் தொட்ட புதுப்பேட்டை

18 Years Of Pudhupettai: தனுஷ் நடிப்பில் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம்.. 18 ஆண்டுகளைத் தொட்ட புதுப்பேட்டை

Marimuthu M HT Tamil
May 26, 2024 12:59 PM IST

18 Years Of Pudhupettai: செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம், புதுப்பேட்டை. இப்படம் வெளியாகி 18ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

18 Years Of Pudhupettai: தனுஷ் நடிப்பில் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம்.. 18 ஆண்டுகளைத் தொட்ட புதுப்பேட்டை
18 Years Of Pudhupettai: தனுஷ் நடிப்பில் கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படம்.. 18 ஆண்டுகளைத் தொட்ட புதுப்பேட்டை

புதுப்பேட்டை படத்தின் கதை என்ன?

இந்தக் கதையானது, படத்தின் முக்கிய கதாபாத்திரமான கொக்கி குமாரை சுற்றித் தான் நடக்கிறது. படம் தொடங்கும் போது, ​​சிறை அறையில் படுத்து கடந்த காலத்தை நினைவுகூர்கிறார், கொக்கி குமார். சென்னையின் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் மேல்நிலைப்பள்ளி மாணவர் குமார். தகராறில் தனது தாயைக் கொன்ற தந்தையைக் கண்ட பிறகு, ஓடிப்போய் தெருக்களில் பிச்சை எடுக்கத் தொடங்குகிறார். 

ஒரு நாள், அங்கு வரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.  அவரை பிணையில் எடுக்கிறார், உள்ளூர் குண்டர் தலைவரான அன்பு. இறுதியில் அன்புவின் அடியாளாக மாறுகிறார், குமார் என்கின்ற கொக்கி குமார். அன்பு, எதிர்க்கட்சித்தலைவர் தமிழ்ச்செல்வனிடம் அடியாளாக இருக்கிறார். பின், கொக்கி குமாருக்கு மணி என்பவருடன் நட்பு கிடைக்கிறது.

 ஆளும் கட்சியின் அரசியல்வாதியான மூர்த்தி தலைமையிலான போட்டி கும்பல்களுடன் ஒரு மோதலின் போது, ​​குமார், மூர்த்தியின் சகோதரனை நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு மத்தியில் தனியாளாகக் கொல்கிறான். அங்கு இருந்து தப்பும்போது, கொலையாளியாக இருக்கும் வித்தையைக் கற்றுக்கொள்கிறான், குமார். இதனால், அன்பு கும்பலின் மரியாதையைப் பெறுகிறான். அன்பு, குமாரை தொழில்முறை கொலையாளியாக அங்கீகரிக்கிறார். 

கொக்கி குமாரின் தாம்பத்திய வாழ்க்கை:

அன்புவின்கீழ் வேலை செய்யும் பாலியல் தொழில் செய்யும் இளம்பெண், கிருஷ்ணவேணி. குமார், அப்பெண்ணைப் பார்த்ததும் பிடித்துப்போகிறது, அன்புவுக்கு. இருவருக்கும் இடையே தாம்பத்திய உறவு ஏற்பட்டுவிடுகிறது. அவரை விடுவிக்கக் கேட்கிறார். பின் நடந்த சண்டையில் அன்புவையே கொன்றுவிடுகிறார், கொக்கி குமார். பின், எதிர்க்கட்சித்தலைவர் தமிழ்ச்செல்வனின் ஆதரவை நாடும் குமார், அவரது கட்டளைப்படி, அன்புவின் ஆட்களை ஒரு இரவில் கட்டுப்படுத்தி, அன்புவின் இடத்தைப் பிடிக்கிறார். 

திடீரென மணியின் சகோதரி செல்வியின் கல்யாணத்துக்குச் செல்லும், குமார் அங்கிருந்த மாப்பிள்ளையிடம் இருந்த தாலியைப் பறித்து, மணியின் சகோதரி செல்விக்குக் கட்டுகிறான். இதனால் கோபம் அடையும் மணி ஆளுங்கட்சி ஆதரவாளரான மூர்த்தியிடம் பணிக்கு சேர்கிறார். அதேநேரத்தில் கர்ப்பமாக இருக்கும் கிருஷ்ணவேணியையும் மணந்துகொண்டு பெரிய ரவுடி ஆகிவிடுகிறான். 

திடீரென குமாருக்கு எம்.எல்.ஏ ஆகும் ஆசை வருகிறது. இதில் நடக்கும் சண்டையில் கிருஷ்ணவேணியைக் கொன்று விடுகிறார்கள், மூர்த்தியின் ஆட்கள். குழந்தையை எப்படியோ மீட்டு வைத்திருக்கும் மணி, குமாரிடம் குழந்தையை ஒப்படைக்கிறார். செல்வி, குமாருடன் செல்ல மறுத்து, தான் கல்யாணம் செய்ய நினைத்த நபருடன் வாழ நினைக்கிறார். பின், அந்த குழந்தையை ஒரு குடும்பத்தில் கொடுத்து யாருக்கும் தெரியாமல் வளர்க்கிறான், குமார். 

இறுதியில் குமாரை, சிறையில் இருந்து வெளியில் அழைத்துவரும்போது, அவருக்கு முதலமைச்சர் எம்.எல்.ஏ. சீட் கொடுக்க நினைக்கிறார். பின் குமார் 3 எம்.எல்.ஏவாகவும், 2 முறை நிதியமைச்சராகவும் ஆகிறார். ஒரு மேடையில் மூர்த்தியையே புகழ்ந்துபேசுகிறார், குமார். தமிழ்ச்செல்வன் அரசியலில் இருந்து விலகி, பேரக்குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். செல்வி, தான் திருமணம் செய்ய நினைத்த நபரையே திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், அவரும் 2 மாதங்களில் காணாமல்போய்விடுகிறார். கொக்கி குமார் எவ்வளவு பெரிய இடத்துக்கு வந்தாலும், தன் மகனை கண்டுபிடிக்கமுடியவில்லை. இவ்வாறு படம் முடிகிறது.

படத்தில் நடித்தவர்கள் விவரம்:

இப்படத்தில் கொக்கி குமாராக நடிகர் தனுஷ், செல்வியாக சோனியா அகர்வால், கிருஷ்ணவேணியாக சினேகாவும் நடித்துள்ளனர். தமிழ்ச்செல்வனாக அழகம்பெருமாளும், மூர்த்தியாக தெலுங்கு நடிகர் பிருத்வி ராஜூம் நடித்துள்ளனர். இப்படத்தில் அன்புவின் உதவியாளராக விஜய்சேதுபதியும் நடித்திருப்பார். குமாரின் நண்பர் மணியாக நிதிஷ் வீரா நடித்திருப்பார்.

படத்தின் இசை மற்றும் பாடல்கள்: 

இப்படத்தின் இசையினை யுவன் சங்கர் ராஜாவும் பாடல்கள் அனைத்தையும் நா. முத்துக்குமாரும் எழுதியிருப்பார். இப்படத்தில் வரும் ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது, வரீயா போன்ற பாடல்கள் இன்றும் பலரது ஃபேவரைட்டாக உள்ளன. 

படம் வெளியாகி 18 ஆண்டுகளைக் கடந்தாலும், சினிமா காதலர்களுக்கு இப்படம் ஒரு கல்ட் கிளாஸிக் கேங்ஸ்டர் பட உணர்வு தரக்கூடியது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.