தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கேள்விகளால் கடுப்பேற்றிய ரசிகர்கள்.. நச்சுன்னு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..என்ன சொன்னார் தெரியுமா?

கேள்விகளால் கடுப்பேற்றிய ரசிகர்கள்.. நச்சுன்னு பதிலடி கொடுத்த நடிகை சமந்தா..என்ன சொன்னார் தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Nov 05, 2024, 04:37 PM IST

google News
தனது உடல் எடை குறித்த விமர்சனங்களுக்கு நடிகை சமந்தா "வாழு வாழவிடு" என பதிலடி கொடுத்திருப்பது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. (Instagram)
தனது உடல் எடை குறித்த விமர்சனங்களுக்கு நடிகை சமந்தா "வாழு வாழவிடு" என பதிலடி கொடுத்திருப்பது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது உடல் எடை குறித்த விமர்சனங்களுக்கு நடிகை சமந்தா "வாழு வாழவிடு" என பதிலடி கொடுத்திருப்பது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமா மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்திய அளவில் தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை சமந்தா. பலப் போராட்டங்களை எதிர்கொண்டு இன்று திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து வந்தார். தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட்டில் டிகே மற்றும் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிட்டாடல் ஹனி பன்னி' (Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸிலும் சமந்தா நடித்துள்ளார். இதற்கான புரமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெப் சீரிஸில் ஆக்‌ஷன் பறக்கும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார் சமந்தா.

ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து லைவ்வில் உரையாடினார் சமந்தா. அதில், ரசிகர்கள் ஒருவர் கூறிய கருத்தால் சமந்தா கவர்ந்தார். மற்றொரு நெட்டிசன் வைத்த கோரிக்கையால் சமந்தா கோபத்தில் இருக்கிறார். ஆம், ரசிகர் ஒருவர் சமந்தாவை 'கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு' கமெண்ட் செய்திருந்தார்.

கடுப்பான சமந்தா

இந்த கமெண்டை படித்த சமந்தா கடுப்பாகிவிட்டார். இருப்பினும் அதற்கு பதிலளித்த சமந்தா "நான் எனது எடையை குறித்த பல்வேறு கமெண்ட்களை சமீபத்தில் பார்த்து வருகிறேன்.உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கடுமையான 'strict anti-inflammatory diet'-ஐ பின்பற்றி வருகிறேன். மயோசிடிஸ் நோய்க்குப் பிறகு எனது உடல்நிலை காரணமாக நான் இப்படி இருந்தேன். இது எனது உடலுக்குத் தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. தயவுசெய்து மனிதர்களை உடலை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள்.

வாழு வாழவிடு..

மேலும், நாம் 2024-க்கு வந்துவிட்டோம். இன்னும் இதுபோல செய்வது சரியல்ல. வாழு, வாழ விடு.. என்பதைப்போல வாழுவோம் (Live and Let Live)" என்று கூறியிருக்கிறார்.

யாரும் இல்லாவிட்டாலும்..

சமந்தா மீது அன்பைப் பொழிந்து உணர்ச்சிகரமான கருத்தை வெளியிட்ட மற்றொரு நெட்டிசன் , "மயோசிடிஸிலிருந்து மட்டுமல்ல, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களிலிருந்தும் நீங்கள் வெளியே வந்த விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களுடன் யாரும் இல்லாவிட்டாலும் நான் இருப்பேன். ஐ லவ் யூ" என்று கமெண்ட் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த சமந்தா, "உங்கள் அன்புதான் என் பலம்" என்று தெரிவித்திருக்கிறார்.

பதிலளிக்க மறுத்த சமந்தா

பல நெட்டிசன்கள் அவரது உடல்நலம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைப்படங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டனர். அவற்றில் சிலவற்றிற்கு சமந்தா பதிலளிக்க மறுத்துவிட்டார்.

வெப் சீரிஸ் எப்போது வெளியாகும்?

'ஹனி பன்னி' என்ற வெப் சீரிஸ் மீது சமந்தாவுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. வெப் சீரிஸ் தயாரிப்பதில் வல்லுநராக அறியப்படும் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இதை இயக்கியுள்ளனர். இந்த தொடர் நவம்பர் 7 முதல் அமேசானில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ராஜ் மற்றும் டி.கே முன்னதாக ஃபார்ஸி மற்றும் தி ஃபேமிலி மென் என்ற வலைத் தொடரின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்தனர். உளவு அதிரடி தொடராக வெளிவரும் இந்த வெப் தொடரில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார். சமந்தா ஏற்கனவே 'தி பேமிலி மேன் 2' என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி