வேட்டையனுக்கு 'வெற்றிகரமான' 25வது நாளாம்! சொல்கிறது லைகா.. கமெண்டுகளில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
வேட்டையன் திரைப்படம் வெற்றிகரமாக 25வது நாளில் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பதாக லைகா தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

வேட்டையனுக்கு 'வெற்றிகரமான' 25வது நாளாம்! சொல்கிறது லைகா.. கமெண்டுகளில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன் - தி ஹண்டர்' திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
நட்சத்திர பட்டாளம் நடித்த வேட்டையன்
இப்படத்தில் நடிகர் ரஜினி காந்த் மட்டுமின்றி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாளம் மட்டுமின்றி தென்னிந்தியாவையே தனது நடிப்பால் கலக்கிவரும் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வேட்டையன் பட இயக்குநர் த.செ. ஞானவேலின் முந்தைய திரைப்படமான ஜெய்பீம் ஏற்படுத்திய தாக்கத்தால் அவருக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். படம் வெளியாகும் முன்னே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்து படத்திற்கு மேலும் ஹைப் கொடுத்தன.