என் இடத்துக்கு புது பொண்டாட்டியா? சைதன்யாவை ரவுண்டு கட்டிய சமந்தா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
முன்னாள் கணவருடன் சேர்ந்து வாங்கிய பிளாட்டில், தனக்கு சேர வேண்டிய பங்குத் தொகையை தருமாறு சமந்தா, நாக சைதன்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சமந்தா தெலுங்கு திரையுலகில் கோலோச்சிவரும் அக்கினேனி நாகார்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை நீண்ட வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சமந்தா முடிவால் ஆடிப்போன சைதன்யா
அவர்கள் காதலர்களாக இருந்த சமயத்தில், இருவரும் சேர்ந்து ஹைதராபாத்தில் பிளாட் ஒன்ரை சுமார் ரூ. 34 கோடிக்கு வாங்கியுள்ளனர். தங்களது கனவு வீடாக இருவரும் அதை உருவாக்கிய நிலையில், அந்த வீட்டுக்கு சமந்தாவே அதிகம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தாவை விவாகரத்து செய்தப் பின், தற்போது சோபிதாவை திருமணம் செய்ய இருக்கும் நாக சைதன்யா, அந்த பிளாட்டை அவருக்கு பரிசு அளிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
இதை அறிந்த சமந்தா, அந்த பிளாட் வாங்கியதில் தனக்கான பங்கை திருப்பி தர வேண்டும் என நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
சினிமா எண்ட்ரி
தமிழ் ரசிகர்ளின் மனங்களில் காதல் திரைப்படம் என்றால் இதுதான் என முத்திரை குத்திய படங்களில் ஒன்று தான் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சமந்தா. பின் இதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் திரிஷாவிற்கு பதிலாக கதாநாயகியாக அறிமுகமானார் சமந்தா. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நாக சைதன்யா.
திருமணம்- விவாகரத்து
இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இருவரும் காதல் வலையில் விழுந்தனர். பின் இருவரும் அவர்கள் கெரியரை பார்த்துக் கொண்டே காதலர்களாக வலம் வந்தனர். இதற்கிடையில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கியிருந்தார்.
பின் சமந்தாவும்- நாக சைதன்யாவும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும் இருவரும் சினிமாவில் நடித்து வரத் தொடங்கிய நிலையில், சமந்தா ரசிகர்கள் கொண்டாடும் மாபெரும் நடிகையாக உருவெடுத்தார்.
அந்த சமயத்தில் நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இந்தத் தகவல்கள் மீடியாவில் கசியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக கூட்டாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சமந்தா மீண்டும் கெரியரில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
டாப் கியரில் கெரியர்
ஆனால், சில நாட்களிலேயே அவர் மையோசிடிஸ் எனும் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். காதல் கணவரின் பிரிவும் நோயும் ஒருசேர சமந்தாவை தாக்கிய நிலையில், தமிழ், தெலுங்கு திரையுலக ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்காக சோகத்தில் மூழ்கினர்.
பின், சிகிச்சைக்காக சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வெடுத்து வந்தார். பின், சிகிச்சை முடிந்து நடிப்பைத் தொடங்கிய சமந்தா தற்போது டாப் கியரில் பறந்து வருகிறார். இவர் தற்போது திரைப்படங்களைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களிலும் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார். தனது அடுத்தடுத்த சினிமா பயணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார்.
நாக சைதன்யாவின் அடுத்த காதல்
இதற்கிடையில், நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் மொழியில் அறிமுகமான நடிகை சோபிதாவை காதலிப்பதாக கூறி அவர்கள் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது, அவர்கள் இருவருக்குமான திருமண வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது.
சமந்தாவின் சம்பவம்
இந்நிலையில் தான், சமந்தாவும் நாக சைதன்யாவும் இணைந்து வாங்கிய பிளாட்டை நாக சைதன்யா அவரது வருங்கால மனைவி சோபிதா துலிபாலாவிற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதை அறிந்த சமந்தா, அந்த பிளாட் வாங்க தான் அளித்த பணத்தை முதலில் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம்.
டாபிக்ஸ்