ஒரே சமயத்தில் 3 பேரை திருமணம் செய்துகொண்ட நடிகை.. திருமணம் குறித்து அவரே சொன்ன பதிலைப் பாருங்க!
Nov 10, 2024, 01:57 PM IST
நடிகை அனுஷ்காவை திருமண கோலத்தில் பார்க்கத் துடிக்கும் அவரது ரசிகர்கள் பலரும் அனுஷ்காவை நடிகருடனோ, இயக்குநருடனோ, தொழிலதிபருடனோ இணைத்து திருமண செய்தியை பரப்பி வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களை மொழி வேறுபாடின்றி தனது அழகாலும் நடிப்பாலும் கட்டிப் போட்டவர் நடிகை அனுஷ்கா. இவர் இரு மொழிகளிலும் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, அருந்ததி, சிங்கம், பாகுபலி போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
அனுஷ்கா திருமணத்தை காண ஆசைப்படும் ரசிகர்கள்
இந்நிலையில் 40 வயதைக் கடந்த அனுஷ்கா தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இதனால், இவரை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என நினைத்தும் அவர் விரைவில் குடும்ப வாழ்க்கையில் இணைய வேண்டும் என நினைத்தும் அவர் நடிக்க ஒப்பந்தமாகும் படங்களில் உள்ள நபர்களுடனும், தொழிலதிபர்களுடனும் சேர்த்து பேசி வருகின்றனர்.
முன்னதாக, தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ரீபல் ஸ்டார் பிரபாஸும், அனுஷ்காவும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக பல கிசிகிசுக்கள் பரப்பப்பட்டன. இவர்கள் விரைவில் திருமணம் கூட செய்ய உள்ளனர் என பல வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அனுஷ்காவின் அம்மா, அவரை துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் மிக ரகசியமாக செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தகவலுக்கு அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த வித எதிர்ப்பும் வராததால் நிச்சயம் இந்தத் திருமணம் நடைபெறும் எனக் கூறினர்.
புதிய வதந்தி
இதற்கிடையில், அந்தப் பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு, தற்போது அனுஷ்கா இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறி வருகின்றனர். அனுஷ்கா கெரியரில் பெரிய சறுக்கலை ஏற்படுத்திய படம் என்றால் அது இஞ்சி இடுப்பழகி தான். தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியான இந்தத் திரைப்படம் ஒரு விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது.
உடல் பருமனாக இருப்பவர்கள் இயற்கையான முறையிலேயே உடல் எடையை குறைக்கலாம். இதற்காக ஜிம்மையும், பிட்னஸ் சென்டர்களையும் அங்கு சாப்பிட கொடுக்கும் பொருட்களையும் நம்பி இருக்க வேண்டாம் என்பதன் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது.
அனுஷ்கா வாழ்க்கையில் நுழைந்த விதி
ஆனால், விதி அனுஷ்கா வாழ்க்கையில் விளையாடியது. இந்தப் படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்த அனுஷ்காவால் அவ்வளவு எளிதில் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் முடியாமல், அவரே பிட்னஸ் சென்டர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தனைக்கும் சினிமாவிற்கு வரும் முன் அனுஷ்கா யோகா டீச்சராக இருந்தவர் தான். எந்த முயற்சியும் இவரது உடல் எடையை குறைக்க உதவாத நிலையில், இவருக்கான பட வாய்ப்புகள் முற்றிலும் குறையத் தொடங்கியது.
திருமணமே முடிந்தது
நிலைமை இப்படி இருக்க, இந்தப் படத்தை இயக்கிய, பிரகாஷ் கோவெலமுடியை அனுஷ்கா திருமணம் செய்து கொண்டார் என சோசியல் மீடியா அனைத்திலும் தகவல் பரவியது.
இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பு தளத்தில் காதல் ஏற்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு திருமணமே நடைபெற்று முடிந்தது எனவும் கூறி வருகின்றனர்.
பின், இதுகுறித்து பேசிய அனுஷ்கா தன்னைப் பற்றி பரப்பப்படும் அனைத்து தகவல்களும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
என் திருமணம் மறைத்து வைக்கப்படாது
என் திருமணம் ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது என எனக்கு தெரியவில்லை. ஒருவரின் திருமண வாழ்க்கையை நிச்சயம் மறைத்து வைத்திருக்க முடியாது. அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று. என் திருமணம் நிச்சயம் மக்களுக்கு தெரியாமல் நடக்காது. அந்த நாள் வரும்போது, நான் அனைவருக்கும் இதுகுறித்து அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
புதிய பட வாய்ப்புகள்
இந்த சமயத்தில் தான் முன்னணி தெலுங்கு இயக்குநர் கிரிஷ் உடன் அனுஷ்கா இணைந்து பணியாற்ற தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஆந்திர, ஒடிசா எல்லையில் கஞ்சா கடத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதை அமைந்துள்ளதாம். இந்தப் படத்திற்கு காட்டி என பெயரிட்டுள்ளது படக்குழு. படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்பே சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின் நிறுத்தப்பட்டதாகவும், தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருபதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்