Anushka Shetty: சத்தமே இல்லாம நடக்கும் திருமண வேலை.. தொழிலதிபரை மணக்கிறாரா அனுஷ்கா?
Anushka Shetty: நடிகை அனுஷ்காவிற்கு துபாயை சேர்ந்த தொழிலதிபருடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து அனுஷ்காவின் குடும்பத்தினர் எந்த பதிலும் கூறாமல் உள்ளதால் தகவல் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய ரசிகர்களை மொழி வேறுபாடின்றி தனது அழகாலும் நடிப்பாலும் கட்டிப் போட்டவர் நடிகை அனுஷ்கா. இவர் இரு மொழிகளிலும் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக, அருந்ததி, சிங்கம், பாகுபலி போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.
அவர் தொடர்ந்து ஹிட் படங்களைத் தருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அனுஷ்கா உடல் எடை காரணமாக அதிக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது தெலுங்கில் முன்னணி இயக்குநரான கிரிஷின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், அனுஷ்காவிற்கு துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது.