தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘ஆபாச படத்தில் நடிச்சது தப்பு தான்.. என்னிடம் சிடி கொடுத்தாங்க.. பெரிய தப்பு பண்ணேன்’ மனம் திறந்த சொர்ணமால்யா!

‘ஆபாச படத்தில் நடிச்சது தப்பு தான்.. என்னிடம் சிடி கொடுத்தாங்க.. பெரிய தப்பு பண்ணேன்’ மனம் திறந்த சொர்ணமால்யா!

HT Tamil HT Tamil

Sep 01, 2024, 07:55 AM IST

google News
Swarnamalya: ‘ஒரு போட்டோ ஷூட், ஒன்றரை சீன் தான் நான் மொத்தமே நடித்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. அதன் பின், அந்த தயாரிப்பாளரை பயங்கரமா திட்டி அனுப்பிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததால், எனக்கு பயங்கரமான தாக்கம் இருந்தது’ (swarnamalyag Instagram)
Swarnamalya: ‘ஒரு போட்டோ ஷூட், ஒன்றரை சீன் தான் நான் மொத்தமே நடித்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. அதன் பின், அந்த தயாரிப்பாளரை பயங்கரமா திட்டி அனுப்பிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததால், எனக்கு பயங்கரமான தாக்கம் இருந்தது’

Swarnamalya: ‘ஒரு போட்டோ ஷூட், ஒன்றரை சீன் தான் நான் மொத்தமே நடித்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. அதன் பின், அந்த தயாரிப்பாளரை பயங்கரமா திட்டி அனுப்பிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததால், எனக்கு பயங்கரமான தாக்கம் இருந்தது’

Swarnamalya: டிவி தொகுப்பாளர், நடிகை, நடன கலைஞர் என பல அவதாரங்களை கொண்டு, கலைத்துறையில் முக்கிய பிரபலமாக அறியப்பட்டவர் சொர்ணமால்யா. ஆபாச திரைப்படத்தில் நடித்தது, திருமண வாழ்க்கையில் முறிவு என பல சர்சைகளில் அவர் பெயர் அடிபட்டு, பெரும்பாலான நடிகைகளைப் போலவே, பல்வேறு சிரமங்களை சந்தித்தவர். டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து தெளிவாகவும், விரிவாகவும் பேசியுள்ளார். இதோ அவருடைய பேட்டி:

‘பிந்நாளில் தான் அந்த தவறை உணர்ந்தேன்’

‘‘திருமணம் செய்து வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற முடிவை நான் எடுக்கவில்லை. என் பெற்றோர்கள் தான் அந்த முடிவை எடுத்தார்கள். ‘இவள் பிரபலமாகி வருகிறாள், அடுத்து அவளை பிடிக்க முடியாமல் போகலாம்’ என்கிற நல்ல எண்ணத்தில் தான் என் பெற்றோர், எனக்கு திருமண ஏற்பாடு செய்தனர். படித்த என் பெற்றோர், வேறு என்ன காரணத்திற்காக சின்ன வயதில் எனக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள். நான் அந்த வயதில் பேச வேண்டியதை என் பெற்றோர்களிடம் பேசவில்லை. அதை பின்னாளில் நான் உணர்ந்தேன். அவர்கள் சொல்லை அப்படியே கேட்டேன். எனக்கு எது வேண்டும், வேண்டாம் என்பதை யோசிக்க கூட நேரம் இல்லாமல் நான் ஓடிக் கொண்டிருந்த சமயம் அது. அதனால், பெற்றோர் சொன்னதை நான் கேட்டேன்.

எப்போ பார்த்தாலும் படிச்சுட்டு பிஸியாவே இருக்கோம், திருமணமாகி ரிலாக்ஸா இருக்கலாம் என நானும் நினைத்தேன். ஆனால், அது பெரிய தவறு. என் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைக்கு சினிமா காரணமில்லை. அது தான் காரணமாக இருந்திருந்தால், நான் சினிமாவை தானே தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், இதை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் நேரம் தான் வீணாகும். திருமண வாழ்க்கை முடிந்து, நான் படிப்பை தான் தொடர்ந்தேன்.

‘அதன் பின் சிரிப்பே வரல’

22 வயது வரை, சிரிப்பைத் தவிர வேறு எதுவுமே எனக்குத் தெரியாது. 22 வயதுக்குப் பிறகு, இந்த கன்னங்கள் தானா சிரிப்பதற்கு என்று யோசித்தேன். 18 ஆண்டுகள் எனக்கு கடுமையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் நான் புரிந்து கொண்டது, ‘யாரையும் நான் மாற்ற முடியாது’. முடியும் அல்லது முடியாது, இதை தவிர வேறு எதுவும் வாழ்க்கையில் இருக்க முடியாது.

என்னுடைய தாத்தா சினிமாவில் இருந்தவர் தான். ஆனால், எனக்கு சினிமாவில் வழிகாட்ட சரியான ஆட்கள் இல்லை. எந்த இலக்கும் இல்லாமல் சினிமாவில் இருந்ததால், எனக்கும் அதைப் பற்றி யாரிடமும் ஆலோசிக்க தோன்றவில்லை. பெற்றோருக்கு வழிகாட்டவோ, கணிக்கவோ அவர்களுக்கும் தெரியவில்லை. மணிரத்தினம் மாதிரி ஒரு இயக்குனர், தயாரிப்பாளரிடம் வேலை பார்த்த எனக்கு, எல்லா தயாரிப்பாளர்களும் ஒரே மாதிரி என்று தான் நினைத்தேன்.

‘ஆபாச படத்தில் நடித்துவிட்டேன்’

ஒரு ஆபாச திரைப்படத்தில் எனக்கே தெரியாமல் நான் நடித்துவிட்டேன். அதில் நான் நடித்தது 10 நிமிடம் தான். அதுவும் ஒரு ஹெஸ்ட் ரோல். அது ஒரு டப்பிங் திரைப்படம். ஒரிஜினல் படத்தின் சிடி.,யை கூட என்னிடம் கொடுத்தார்கள். நான் எவ்வளவு விளையாட்டுத் தனமாக இருந்திருந்தால், அதை கூட பார்க்காமல் இருந்திருப்பேன்? நான் ஜாலியா, சுதந்திர பறவையாக இருந்துட்டேன். தெளிவான முடிவு எடுக்காமல் விட்டுவிட்டேன்.

அந்த நிமிட காட்சியில் நான் நடிப்பதற்கு, முறைப்படி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன். நான் நினைத்திருந்தால், நீதிமன்றம் போய், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்யலாம் என்று நான் யோசிக்கவில்லை. தெளிவில்லாமல் இருந்துவிட்டேன். ஒரு பிரச்னைக்கு மேல் இன்னொரு பிரச்னை வரும். அப்படி தான் அந்த படத்தில் நடித்தது ஒரு விபத்து.

ஒரு போட்டோ ஷூட், ஒன்றரை சீன் தான் நான் மொத்தமே நடித்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. அதன் பின், அந்த தயாரிப்பாளரை பயங்கரமா திட்டி அனுப்பிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததால், எனக்கு பயங்கரமான தாக்கம் இருந்தது. வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என்று கூறினார்கள். ஆனால், உண்மையில் அதை விட பெரிய தவறுகளை நான் செய்திருக்கிறேன். எனக்கு திருமணம் நடந்தது தான் பெரிய தவறு.

குறிப்பிட்ட ஒரு உடை அணிந்ததும், அந்த படத்தில் நான் நடிக்க சம்மதித்ததை கூறுகிறார்கள். அதை விட பயங்கரமா நடித்தவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் எனக்கு அதில் உடன்பாடில்லை. ஆனால், அதை நான் சொல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், அதை வைத்து கேள்வி எழுப்பினார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனால், அந்த படத்திற்கு நான் ஒப்புக்கொண்டது தவறு தான். இன்று கூகுள் திறந்தால், எல்லாவற்றையும் அறிய முடியும். அன்று எங்களுக்கு எதுவுமே இல்லை,’’ என்று சொர்ணமால்யா கூறியிருந்தார்.

சினிமா தொடர்பான சுவாரஸ்யமான பேட்டிகளை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி