Sri Reddy: "மிஸ்டர். உமனைசர், என்னிடம் செருப்பு இருக்கிறது..!" விஷால் பேச்சுக்கு நடிகை ஸ்ரீரெட்டி காட்டமான பதிவு
Aug 29, 2024, 08:06 PM IST
சினிமாவில் பாலியல் சீண்டல்கள் கண்டறியும் பொருட்டு கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் குழு அமைக்கப்படுவதாக நடிகர் சங்க பொதுசெயலாளரும், நடிகருமான விஷால் பேசியதற்கு மிஸ்டர். உமனைசர் என குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி காட்டமான பதிவு பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்து சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் பல்வேறு ஊடகங்களில் அளித்த பேட்டியில் நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் என பிரபலமானவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அப்போது இவரது பேச்சு சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
தமிழ் சினிமாவிலும் குற்றச்சாட்டு
இந்த சூழ்நிலையில், நடிகர் விஷால் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தமிழிலும் இதுபோன்ற சூழல் இருக்கிறதா என கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், "கேரளாவில் ஹேமா கமிட்டியை போல் தமிழ்நாட்டில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். பட வாய்ப்புக்காக அட்ஜஸ்மெண்ட்டுக்கு யாராவாது கூப்பிட்டால் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும். காலம் காலமாக தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வந்துகொண்டு தான் இருக்கிறது.
யாராவது தவறான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்கள் என்றால் அவர்களை செருப்பால் அடிக்கும் துணிச்சல் பெண்களுக்கு வர வேண்டும். இதுதொடர்பாக யாராவது புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
இதுதொடர்பாக நடிகை ஸ்ரீரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், (ஸ்ரீரெட்டியின் பதிவு தமிழில்)
"மிஸ்டர். உமனைசர் மற்றும் வெள்ளை முடியுடன் கூடிய வயதான அங்கிள். மீடியா முன்னிலையில் பெண்களை பற்றி பேசும்போது உங்களது நாக்கு கவனமாக இருக்க வேண்டும். பெண்களை பற்றி உங்களது இழிவான பேச்சு, மொழியை பயன்படுத்தும் விதம், நீங்கள் நடுங்குவது , பிரச்னைகளை உருவாக்கும் விதம் நல்லவர்கள் அனைவருக்கும் தெரியும்.
நீங்கள் மோசடி பேர்வழி. அது உங்களுக்கே தெரியும். மீடியா முன்னால் பல உதாரணங்களை பேசுவதால் பொறுப்பானவர் என்று நினைத்து கொள்ள வேண்டாம்.
கர்மா பதில் கூறும்
நீங்கள் ஒரு பைத்தியம் என்பதை பல முறை நிருபித்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பல பெண்கள் உங்களை விட்டு விலகியது ஏன்? உங்கள் நிச்சயதார்த்தம் நின்றது ஏன்? அடுத்த முறை இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் ஒரு பெரிய பதவியில் இருப்பது பெரிய விஷயமல்ல. கொஞ்சம் கண்ணியமாக இருங்கள். இல்லாவிட்டால் கர்மா உங்களுக்கு பதில் கூறும்.
என்னிடம் ஏராளமான கலெக்ஷன் இருக்கிறது (செருப்பு எமோஜியுடன்). உங்களுக்கு ஒன்று வேண்டுமா? என்னிடம் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை
இதையடுத்து கேரளாவில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி சார்பில் மலையாள சினிமாவின் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல், பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையிலான மூவர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. இதுதொடர்பான அறிக்கை சமீபத்தில் வெளியான நிலையில் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த அறிக்கைக்கு பின்னர் மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களான ரஞ்சித், சித்திக் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்