HBD Kajol: ‘வெண்ணிலவே வெண்ணிலவே’-இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கஜோல் பிறந்த நாள் இன்று-vennilave vennilave kajol the leading actress in indian cinema birthday today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Kajol: ‘வெண்ணிலவே வெண்ணிலவே’-இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கஜோல் பிறந்த நாள் இன்று

HBD Kajol: ‘வெண்ணிலவே வெண்ணிலவே’-இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கஜோல் பிறந்த நாள் இன்று

Manigandan K T HT Tamil
Aug 05, 2024 09:55 AM IST

Actress Kajol birthday: கபி குஷி கபி காம் என்ற குடும்ப படத்தில் நடித்த போது (2001), இது அவருக்கு மூன்றாவது பிலிம்பேர் விருதை வென்று கொடுத்தது. காதல் திரில்லர் ஃபனா (2006) மற்றும் மை நேம் இஸ் கான் (2010) படத்தில் நடித்ததற்காக மேலும் இரண்டு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றார்.

HBD Kajol: ‘வெண்ணிலவே வெண்ணிலவே’-இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கஜோல் பிறந்த நாள் இன்று
HBD Kajol: ‘வெண்ணிலவே வெண்ணிலவே’-இந்திய சினிமாவில் முன்னணி நடிகை கஜோல் பிறந்த நாள் இன்று

இந்தி சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர். இவர் சிறந்த நடிப்புக்காக 6 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

தனுஜா மற்றும் சோமு முகர்ஜி ஆகியோரின் மகளான கஜோல், பள்ளியில் படிக்கும்போதே பேகுடி (1992) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் தனது படிப்பை நிறுத்தினார், மேலும் ஷாருக் கானுடன் நடித்த பாஜிகர் (1993) மற்றும் யே தில்லாகி (1994) ஆகிய படங்களில் வணிக ரீதியான வெற்றிகளைப் பெற்றன.

இதையும் படிங்க: Indian 2 OTT Update: 'தாத்தா வராரு..கதற விட போறாரு'..இந்தியன் 2 OTT ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே

இவருக்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது. தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே (1995) மற்றும் குச் குச் ஹோதா ஹை (1998) ஆகிய படங்களில் ஷாருக் கானுடன் நடித்தது 1990 களில் அவரை ஒரு முன்னணி நட்சத்திரமாக நிலைநிறுத்தியது மற்றும் சிறந்த நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுத் தந்தது. குப்த்: தி ஹிடன் ட்ரூத் (1997) மற்றும் துஷ்மன் (1998) படத்தில் ஒரு மனநோயாளி கொலையாளியாக நடித்ததற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

கபி குஷி கபி காம் என்ற குடும்ப படத்தில் நடித்த போது (2001), இது அவருக்கு மூன்றாவது பிலிம்பேர் விருதை வென்று கொடுத்தது. காதல் திரில்லர் ஃபனா (2006) மற்றும் மை நேம் இஸ் கான் (2010) படத்தில் நடித்ததற்காக மேலும் இரண்டு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றார்.

இதையும் படிங்க: Radha Ravi: 2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர்ந்த ராதா ரவி.. பிசாசு பட ரகசியத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கின்!

சமூக ஆர்வலரும் கூட..

திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர, கஜோல் ஒரு சமூக ஆர்வலராகவும், விதவைகள் மற்றும் குழந்தைகளுடன் பணியாற்றியதற்காகவும் அறியப்படுகிறார். இவர் 2008 ஆம் ஆண்டில் ராக்-என்-ரோல் ஃபேமிலி என்ற ரியாலிட்டி ஷோவில் திறமை நடுவராக பங்கேற்றார்.

தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 2 படத்தில் கூட நடித்திருந்தார் கஜோல்.

கஜோல் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அஜய் தேவ்கனை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கஜோலின் தந்தை பாலிவுட்டில் திரைப்பட இயக்குநராக இருந்தவர். இவரது தாயார் நடிகை. இவரது தாயாரை பார்த்தே நடிப்புத் துறைக்கு வந்ததாக கஜோல் கூறியிருக்கிறார். கஜோலின் சகோதரி தனிஷா முகர்ஜியும் நடிகை தான். உன்னாலே உன்னாலே படத்தில் நடித்திருந்தாரே அவரே தான்.

கஜோலின் கணவர் அஜய் தேவ்கன் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 1997ம் ஆண்டு தமிழில் வெளியான மின்சாரக் கனவு படத்தில் பிரியா கதாபாத்திரத்தில் "வெண்ணிலவே வெண்ணிலவே'' பாடலில் பிரபுதேவாவுடன் நடனமாடிய கஜோலை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா என்ன?

இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கஜோல்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.