‘கங்குவா பார்க்கலை.. ஆனா..’: மாப்ள போட்டிருக்க டிரெஸ் பத்தி தெரியாது பாணியில் மாட்டிக்கொண்டு சமாளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
Dec 16, 2024, 09:15 AM IST
‘கங்குவா பார்க்கலை.. ஆனா..’: மாப்ள போட்டிருக்க டிரெஸ் பத்தி தெரியாது பாணியில் மாட்டிக்கொண்டு சமாளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் உடைய பேட்டி வைரல் ஆகியுள்ளது.
‘கங்குவா திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்றும்; ஆனால், தனது அம்மா பார்த்தார்கள் எனவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கங்குவா படம் தோல்வி குறித்த கேள்வியைச் சமாளித்தார். இது படையப்பா படத்தில் வரும் மாப்பிள்ளை இவர் தான்; அவர் போட்டிருக்க டிரெஸ் பத்தி தெரியாது என்னும் பாணியில் இருந்தது.
கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில், ‘’நான் நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், எங்கள் அம்மா பார்த்தார்கள். எனது அம்மா பார்த்து ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். கங்குவா படம் எல்லோருக்குமே பிடிக்கணும்னு அவசியம் இல்லைல.
சில படங்கள் ஒருத்தருக்குப் பிடிக்கும். சில படங்கள் ஒருத்தருக்கும் பிடிக்காமல் இருக்கும். அந்த மாதிரி இருக்கும்போது யாரையும் புண்படுத்தாமல் ஒரு விஷயத்தைச் சொன்னால் கொஞ்சம் பெட்டராக இருக்கும். பிடிக்கலைங்கிறதை பிடிக்கலைன்னு சொல்றது தப்பில்லை. மொத்தத்தில் பிடிக்கலைங்கிறதை யாரையும் காயப்படுத்தாமல் சொல்லலாம். ஆனால், சொல்ற விதம்னு ஒன்னு இருக்கு’’ எனச் சொல்லி முடித்தார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
கங்குவா படத்தின் கதை என்ன?
நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர் தான் குலத்தொழில் ஆகும்.
வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவனுக்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான்.
இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் அவனை தீ வைத்து கொழுத்த, அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு கங்குவா எதிராக நிற்க, ’என் மகன் இனி உன் மகன்’ என்று சொல்லி, ’கங்குவன் கையில் மகனை ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி’.. அதன் பின்னர் என்ன ஆனது?
உதிரன் என்பவர் பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்லத்துடிக்கும் கொடுவாவின் மகனின் கதை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை ஆகும்.
பார்வையாளர்களிடம் கனெக்ட் ஆகாத கங்குவா:
நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி முதன்முறையாக ஜோடிபோட்டு நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இப்படம் கடந்த மாதம் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம், ரூ.110 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்தது. சமீபத்தில் ஓடிடியில் அமேசான் பிரைமில் வெளியானபின் கங்குவா அவ்வளவு மோசமான படம் இல்லை என்றும், நல்ல படம் தான் என்றும் பெயரைப் பெற்று வருகிறது.
கங்குவா திரைப்படத்தில் எது சொதப்பியது:
கங்குவா படத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதையை நிகழ்காலத்துடன் இணைக்க முயன்றார், இயக்குநர் சிவா.
‘’கங்குவா'' திரைப்படத்தில் முக்கியமில்லாத கதாபாத்திரங்களின் அறிமுகமும், படத்தின் முதல் 20 நிமிடக் காட்சிகளும் சலிப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் மோசமாக நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. கதை தேவை இல்லை என்றாலும்; ஐந்து வம்சங்களைப் பற்றி சொல்ல வந்த இயக்குநர் சிவாவின் முயற்சி பார்வையாளர்களைக் குழப்பியது. அதனால் பார்வையாளர்களை இந்தக் கதையில் முழுமையாக ஒன்றவில்லை.
டாபிக்ஸ்