படம் பிடிக்கலயா.. சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணைஅவர மாதிரி யாருமே ' - கங்குவாகுறித்து மிஷ்கின்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  படம் பிடிக்கலயா.. சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணைஅவர மாதிரி யாருமே ' - கங்குவாகுறித்து மிஷ்கின்

படம் பிடிக்கலயா.. சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணைஅவர மாதிரி யாருமே ' - கங்குவாகுறித்து மிஷ்கின்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 14, 2024 01:01 PM IST

சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணை காட்டுங்க...அவர மாதிரி ' -

சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம்  கருணை

அவர மாதிரி யாருமே ' - மிஷ்கின்
சூர்யாவை திட்டாதீங்க.. கொஞ்சம் கருணை அவர மாதிரி யாருமே ' - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் கேள்வி

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், 'இந்த மேடையில் வந்து ஆடியவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் கைதட்டல்கள் தான் ஆதாரம். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் உங்களிடமிருந்து தான் காசு வாங்கிக் கொண்டு சாப்பிடுகிறோம், கார் வாங்கிக் கொள்கிறோம். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான ஒரு பெரிய படத்தை ரசிகர்கள்  கன்னா பின்னா வென்று விமர்சனம் செய்தார்கள். அதற்கு உங்களுக்கு எல்லாவிதமான உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. 

சிறிது உண்மை இருந்தாலும்..

ஒரு திரைப்படத்தில் சிறிது உண்மை இருந்தாலும், பார்வையாளர்களும் பத்திரிக்கையாளர்களும் அந்த படத்தை தலையில் வைத்து கொண்டாடி விடுவார்கள். இன்று பார்வையாளர்களுக்கு கண்டுகளிக்க பலவிதமான தளங்கள் இருக்கின்றன. இன்ஸ்டாகிராமில் நொடிகளில் அவர்கள் பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அப்படியான ஒரு சூழ்நிலை  இருக்கும் பொழுது, நாம் திரையில் சொல்லும் கதையானது, கதை சொல்லும் விதமானது, மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். 

நாம் படித்து வளர்கிறோம்.

நாம் படித்து வளர்கிறோம். அவர்கள் பல விஷயங்களைப் பார்த்து வளர்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது, ஒரு விஷயம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். அப்போது அவர்கள் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அதை கேமராவின் வழியாக நாம் காட்டி விடுகிறோம். அந்த சமயங்களில் அவர்கள் வரம்பு மீறி பேசி வருகிறார்கள். அதை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 

கருணை காட்ட வேண்டும்.

நடிகர்களுக்கு நீங்கள் கொஞ்சம் கருணை காட்ட வேண்டும். சொல்வதற்கு அச்சப்படவில்லை கங்குவா படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அந்தப் படத்தை கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். இருப்பினும், நீங்கள் கொஞ்சம் கருணையோடு இது போன்ற விஷயங்களை அணுக வேண்டும். சூர்யா மிகவும் நல்ல நடிகர்; அழகானவர். இன்று நம்முடன் சிவாஜி இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை ஆனால் அவர்களுடன் பணியாற்றிய சிவக்குமார் இருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் நாங்கள் கடுமையாக கஷ்டப்படுகிறோம். இந்த இடத்தில் நாங்கள் கஷ்டப்படுவதை கூறி, உங்களிடம் கூறி மடிவிரிக்கவில்லை. நாங்கள் எங்களை மறந்து வேலை பார்க்கிறோம். ராக்கெட் அறிவியலைப் பொறுத்தவரை ஒரு ராக்கெட்டை உருவாக்குவதற்கு பல பேர் ஒத்த சிந்தனையோடு பல மணி நேரம் உழைக்கிறார்கள். அதில் ஒரு சின்ன குறை இருந்தால் கூட அது வானத்தில் வெடித்து விடுகிறது அதேபோலத்தான் சினிமாவும்.. ஆகையால் கொஞ்சம் கருணையோடு விமர்சனம் செய்யுங்கள் ' என்று பேசினார். 

 

 

Whats_app_banner

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.