வேட்டையனைத் தேடி வந்த கோட்.. சைலன்டான சம்பவம்.. வெறித்தனம் வெறித்தனம்.. ஆரவாரம் செய்த ரசிகர்கள்
Oct 10, 2024, 03:04 PM IST
நடிகர் ரஜனிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் படத்தைப் பார்க்க நடிகர் விஜய் யாருக்கும் தெரியாமல் வந்துள்ளார். இதனை, கண்டுபிடித்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்ரு வெளியானது. இந்தப் படத்தைக் காண ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப் பிரபலங்களும் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஜெய்பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி காந்த் மட்டுமின்றி, நடிகர் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், அபிராமி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று வேட்டையன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தமிழ்நாட்டின் முக்கிய திரையரங்குகளில் நடிகர்கள் தனுஷ், விஜய், இசையமைப்பாளர் அனிருத் போன்ற பிரபலங்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
வேட்டையனைப் பார்க்க வந்த கோட்
அந்த வகையில், நடிகர் விஜய், சென்னையில் உள்ள பிரபல தேவி திரையரங்கில் ரஜினியின் வேட்டையன் படத்தை பார்க்க வந்துள்ளதாக சோசியல் மீடியாவில் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.
நீலநிற சட்டை அணிந்து வந்த விஜய், ரசிகர்கல் தன்னை அடையாளம் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக கைக்குட்டையால் முகத்தை கட்டியபடி வந்துள்ளார். என்னதான் தமிழ் திரையுலகில் பெரிய நடிகராக வலம் வந்தாலும், இவர் நடிகர் ரஜினியின் ரசிகராகவும் உள்ளார். தங்களைப் போலவே அவரும் ரஜினியின் வேட்டையன் படத்தை பெரிய திரையில் பார்த்து ரசிக்க தியேட்டருக்கு வந்துள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஹைப்பை ஏற்றிய ட்ரெயிலர்
முன்னதாக வேட்டையன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினி, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது போன்றும், அதற்காக காவலர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்றும், நீதிபதியிடம் உரையாடுவது போன்றும் விறுவிறப்பான காட்சிகளுடன் வந்துள்ளது வேட்டையன் ட்ரெயிலர். பெண்கள் பாதுகாப்பு, திருடன், என்கவுன்டர், அநீதி என பல ஏரியாக்களில் வேட்டையன் படம் பயணிக்கிறது என ட்ரெயிலர் மூலம் ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
ஹிட்டடித்த பாடல்கள்
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் துள்ளலான இசையினால் இளைஞர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 மணி நேரம் 47 நிமிடம் உள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
நடிகர் ரஜினி காந்த்தின் 170வது படமான வேட்டையனை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், அந்தப் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
யூகங்களில் உள்ள ரசிகர்கள்
முன்னதாக படத்தில் ட்ரெயிலரில், இங்க பொன்னுங்களுக்கு பாதுகாப்பே இல்ல. பொறுக்கிங்களுக்கு தான் பாதுகாப்பு.. இந்த மாதிரி பொறுக்கிங்கள என்கவுன்டர் தான் பண்ணனும்.. குற்றவாளியை கண்டுபிடிக்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க.. இன்னும் ஒரு வாரத்துல என்கவுன்டர் பண்ணியே ஆகனும்.. ஒருவாரம் ரொம்ப அதிகம் 3 நாளுல டிபார்ட்மெண்டக்கு நல்ல பேர் வரும்.. போதும்..
திருடன்னா முகமுடி போட வேண்டாம். கொஞ்சம் மூளை இருந்தா போதும். பேசிப் புரியோஜனம் இல்ல.. தூக்குவோம்.. ஒரு அநீதியை இன்னொரு அநீதியால வெல்ல முடியாது.. நீங்க என் எங்க தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான்.. என்கிட்ட இருந்து யாராலையும் காப்பாத்த முடியாது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தின் கதையை ரசிகர்கள் யூகித்து வைத்துள்ளனர்
இந்த யூகங்கள் அனைத்தும் சரிதானா, படம் என்ன சொல்கிறது என்பதைக் காண தற்போது திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.