வசூல் வேட்டையை தொடங்கிய வேட்டையன்..தளபதி விஜய்யின் தி கோட் பைனல் வசூல் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகி வசூல் வேட்டையை இன்று முதல் தொடங்கிய நிலையில், தளபதி விஜய்யின் தி கோட் பைனல் வசூல் எவ்வளவு என்பதை படத்தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வேட்டையன் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. மற்ற ரஜினி படங்கள் போல் பெரிய ஹைப் இல்லை என்று கருத்துகள் பகிரப்பட்டபோதிலும், படம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. படத்துக்கு தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன.
கடந்த மாதம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்துக்கு பின்னர் பெரிய பட்ஜெட் படமாக வேட்டையன் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் வேட்டையன் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வந்த தி கோட் படத்தின் முழு வசூல் நிலவரத்தை படத்தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்.