தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  100 கோடிக்கே திணறும் வேட்டையன்.. கிறுகிறுக்கும் லைகா.. 12ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

100 கோடிக்கே திணறும் வேட்டையன்.. கிறுகிறுக்கும் லைகா.. 12ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Oct 22, 2024, 10:49 AM IST

google News
நடிகர் ரஜினி காந்த்தின் வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகி 12 நாட்கள் ஆன பின்னும் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலை பெறாமல் தள்ளாடி வருகிறது.
நடிகர் ரஜினி காந்த்தின் வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகி 12 நாட்கள் ஆன பின்னும் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலை பெறாமல் தள்ளாடி வருகிறது.

நடிகர் ரஜினி காந்த்தின் வேட்டையன் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகி 12 நாட்கள் ஆன பின்னும் இன்னும் 100 கோடி ரூபாய் வசூலை பெறாமல் தள்ளாடி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்து வெளியான வேட்டையன் திரைப்படம் வெளியாகி 12ஆவது நாளில் இந்தியா முழுவதும் ரூ.2.05 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது.

வேட்டையன் வசூல் எவ்வளவு

வேட்டையன் திரைப்படம் வெளியான 12ம் நாளான நேற்று ஒரு நாளில் மட்டும் 2.05 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 99.6 கோடி ரூபாயும், இந்திய அளவில் 137.27 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. இந்தப் படம் வெளியாகி 12 நாட்களைக் கடந்தும் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாயை இன்னும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வழக்கமாக ரஜினி படம் வெளியான சில நாட்களிலேயே படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை எகிறவிடும். ஆனால், தற்போது படம் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் 100 கோடியே தாண்டாமல் உள்ளதற்கு மிகப் பெரிய காரணமாக இருப்பது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையேயான போட்டி தான் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வசூல் நிலவரம்

இந்த திரைப்படம் வெளியான அன்றைய தினம் 31.7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 24 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் 26.75 கோடி வசூல் கிடைத்த நிலையில், நான்காம் நாளில் 22.3 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 5ம் நாளான நேற்று முன் தினம் வேட்டையன் திரைப்படம் 5.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

வேட்டையன் 12ம் நாள் இறுதியில் உலகளவில் ரூ. 235.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

கதையின் கரு என்ன?

கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.

அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.

அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!

வேட்டையன் சொல்லும் நீதி என்ன?

ஜெய்பீம் படத்தில், பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த த. செ. ஞானவேல் இந்தப்படத்தில் என்கவுண்டர் சரியா? தவறா?.. தாமதமான நீதியின் பலன்...? நீட் தீர்வால் ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் உள்ளிட்டவற்றை விவாதமாக எடுத்து முன் வைத்திருக்கிறார். படத்தில் என்கவுண்டருக்கு ஆதரவாக ரஜினியும், அதற்கு எதிராக அமிதாப்பும் நடக்கும் வாக்குவாதங்கள் மிக முக்கியமானவை.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி