வில்லனாக மிரட்டிய ரஜினி..விஜய்யின் மர்கெட்டை உயர்த்திய மாஸ் ஹிட்! தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்
வில்லனாக மிரட்டிய ரஜினி, விஜய்யின் மர்கெட்டை உயர்த்திய மாஸ் ஹிட், சிவாஜி கணேசன் நடித்த கிளாசிக் ஹிட், ரஜினியின் மற்றொரு மாஸ் ஹிட் படம் தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இன்றைய நாளில் தீபாவளி ரீலிசாக வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் நடித்த படங்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 22ஆம் தேதி வெளியான தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
செளபாக்கியவதி
கடந்த 1957ஆம் ஆண்டில் தீபாவளி நாளான அக்டோபர் 22ஆம் தேதி வெளியான வரலாற்று காமெடி படம் செளபாக்கியவதி. ஜெமினி கணேசன், சாவித்திரி, எஸ்.வி.ரெங்கா ராவ், கே.ஏ. தங்கவேலு, டி.பி. முத்துலட்சுமி, காக்கா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ஜம்பண்ணா இயக்கியுள்ளார். படத்தில் மொத்தம் 16 பாடல்கள் இடம்பிடித்திருக்கும் நிலையில், மகாகவி காளிதாஸ், ஏ.எல். நாரயணன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பழனிசாமி ஆகியோர் பாடல் வரிகள் எழுத பெண்ட்யலா இசையமைத்துள்ளார். சிறந்த காமெடி படமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற செளபாக்கியவதி வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது
முதலாளி
1957இல் செளபாக்யவதி படம் வெளியான அதே நாளில் போட்டியாக வெளியான படங்களில் ஒன்று முதலாளி. எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்திருக்கும் இந்த படத்தை முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். பழம்பெரும் நடிகை தேவிகாவின் அறிமுக படமாகவும் முதலாளி உள்ளது. ராமானுஜம் மேடை நாடகத்தை அடிப்ப்டையாக வைத்து உருவான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா ஆகியோருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இந்த படம் தெலுங்கு, மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்ட அங்கு வரவேற்பை பெற்றது