தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது: பொன்வண்ணன் நெகிழ்ச்சி

Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது: பொன்வண்ணன் நெகிழ்ச்சி

Marimuthu M HT Tamil

Sep 26, 2024, 12:04 AM IST

google News
Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது என பொன்வண்ணன் நெகிழ்ச்சி பட பேசியுள்ளார்.
Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது என பொன்வண்ணன் நெகிழ்ச்சி பட பேசியுள்ளார்.

Saranya Ponvannan Love Story: எங்க காதல் தொடங்கிய புள்ளி இதுதான்.. 25ஆண்டுகளைக் கடந்துவிட்டது என பொன்வண்ணன் நெகிழ்ச்சி பட பேசியுள்ளார்.

Saranya Ponvannan Love Story: சரண்யாவையும் என்னையும் இணைத்தது இந்தப் புள்ளி தான், என நடிகர் பொன் வண்ணன் தங்களின் காதல் கதையை மேடையில் பகிர்ந்தது வைரல் ஆகியுள்ளது. 

சமீபத்தில் சரண்யா பொன்வண்ணன் நடத்தும் ஆடை தொடர்பான டிசைனிங் பள்ளியின் பத்தாம் ஆண்டுவிழா மேடையில் பேசிய அவரது கணவரும் நடிகர் மற்றும் இயக்குநருமான பொன் வண்ணன் தங்கள் காதல் கதையைப் பகிர்ந்துகொண்டார். 

அதில், ‘’ நான் கருத்தம்மா படத்தில் வந்து டைரக்டர் டிபார்ட்மென்ட். கூடவே, நான் நடிக்கிறேன். நான் படப்பிடிப்புக்கிளம்பிட்டு இருக்கும்போது ஒரு ரூமில் பிரவுன் பேப்பரை போட்டு, கட் பண்ணிட்டு இருக்காங்க. நான் முன்னாடி அவரை சினிமாவில் பார்த்ததோடு சரி. சந்திச்சது இல்லை. நான் இவங்களை கிராஸ் செய்யும்போது டைரக்டர் டிபார்ட்மென்ட்டாக அவரைப் பார்த்துட்டுப் போயிட்டேன்.

எங்களை இணைத்த புள்ளி கலை தான் - பொன்வண்ணன்

அப்புறம் படப்பிடிப்பில் அவர்களிடம் கேட்டேன்,’ என்ன கட் பண்ணி வரைச்சிட்டு இருக்கீங்களேன்னு’ கேட்டேன். அப்போ சொன்னாங்க, ’கொத்தாரி இன்ஸ்டியூட்டில் டிசைனிங் படிச்சிட்டு இருக்கேன்; அதுக்கு எக்ஸாம் எல்லாம் இருக்கு; இங்கே சூட்டிங்கில் அதற்கு பிரிபேர் பண்ணிட்டு இருக்கேன்’ அப்படின்னு சொன்னாங்க. இயல்பிலேயே நான் ஓவியன். அதனால் ஒரு மரியாதை வந்திருச்சு. ஒருத்தர்மேல் மரியாதையோ அன்போ வருவதற்கு ஒரு புள்ளி இருக்கும் இல்லையா. ஒன்று குணாதிசயமாக இருக்கும், உதவியாக இருக்கும். நடிகர் - நடிகை இதையெல்லாம் தாண்டி, நம்ம சாதிடா இவங்க, ஒரு ஆர்ட் இவங்ககிட்ட இருக்குனு தோணுச்சு பாருங்க. அதுதான் கல்யாணத்தில் வந்து முடிஞ்சது.

லவ் அப்படிங்கிறதுக்கு ஒரு புள்ளி தேவைப்படுது. அதற்கு ஒரு புள்ளி தேவைப்படுது. அது எதுவாக வேணும்னாலும் இருக்கலாம். இந்த நிகழ்வு நடந்து 4 வருடங்கள் கழித்துதான் நான் திருமண வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்கிறேன். வாழ்க்கையை நினைச்சு யோசிக்கும்போது ரசனை ஒத்தவங்க நமக்கு துணையாக இருக்கணும்னு நமக்கு எப்போதுமே தோணும். அப்ப யாரையும் நம்ம பழகினது இல்லையே அப்படி யோசிக்கும்போது, நம்ம ரசனை ஒத்தவங்களா, இவங்க தான் வந்து நிற்கிறாங்க. பிறகு நான் போய் கேட்டேன். இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடந்தது. லவ்வில் ஆரம்பிச்சு, ஆரெஞ்ச் மேரேஞ் ஆக நடந்து இருபத்து ஐந்து வருடங்களை நிறைவுசெய்துட்டோம்.

என் மனைவி அனைத்திலும் 100 விழுக்காடு: பொன்வண்ணன்

உங்களுக்கு எல்லாம் டி-சாஃப்ட் தெரிஞ்சதை விட, நான் ஒரு இரண்டு பரிமாணங்களில் டி- சாஃப்ட்(சரண்யா பொன்வண்ணன் நடத்தும் ஆடை வடிவமைப்பு பள்ளி)பற்றி சொல்றேன். ஒன்று கணவனுடைய பார்வையில் மனைவி டி-சாஃப்ட்டை நடத்துவது; இரண்டு, டி-சாஃப்ட்டுக்குள் வரும் மாணாக்கர்கள் எப்படி முழுமையாக வெளியே போறாங்க அப்படின்னு. இந்த இரண்டையும் முழுமையாகப் பார்த்தவன் நான்.

மாஸ்டர் ரொம்ப முக்கியம். ஒன்று தன்னம்பிக்கையோடு வருவாங்க. சிலருக்கு தன்னம்பிக்கை இருக்காது. குடும்பச்சூழ்நிலைகள், தூரம், எதிர்பார்ப்புகள், கனவுகள் இப்படி வெவ்வேறு எண்ணங்களில் உள்ள வருபவங்க இருப்பாங்க. ஆனா, மாஸ்டரோட குணம் நீங்கள் யாராக வேண்டுமென்றாலும் இருந்துக்கங்க. உள்ளே வந்ததில் இருந்து வெளியில்போகும்போது 100 சதவீத முழுமையாக வெளியில் போகணும்ங்கிறது.

அவங்க மாஸ்டராக இருப்பது என்பது நியாயமாக மிலிட்டரியில் தான் அப்படி இருக்கணும்.(சொன்னவுடன் பலர் சிரிக்கின்றனர்). பார்த்தீயா. எவ்வளவு பாதிக்கப்பட்டுருக்கங்கன்னு. சில சோகங்கள் சிரிப்பில் முடியும்ன்னு சொல்வாங்கல்ல, அதுதான் இது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஓனர் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கைப் புத்தகம் கிடைத்தால் படிச்சு பாருங்க. அவ்வளவு பெர்ஃபெக்‌ஷன் இருக்கும். ஆப்பிள் போனுடைய பாக்ஸ், கூட இப்படி தான் இருக்கணும்னு முடிவு எடுத்திருப்பார். கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் டி-ஷாஃப்ட்டின் பெண் வெர்ஷன்.

ஒரு பெண் குழந்தை வளர்ப்பிலும் 100%. கணவனுக்குத் தேவையானதை செய்வதிலும் கவனிப்பதிலும் 100%. எல்லா பரிணாமங்களிலும் முழுமையாக இருக்கிறதுக்காக நான் சரண்யாவுக்கு கை எடுத்து கும்பிடுறேன்'' என நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் கூறினார்.

நன்றி: சினி உலகம் யூட்யூப்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி