HBD Steve Jobs: ’ரோலர் கோஸ்டர் வாழ்கையில் உலகை அசைத்தவர்!’ ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்தநாள் இன்று!
“உங்கள் நேரம் குறைவாக உள்ளது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.”
ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற பெயர் வெறும் பெயர் மட்டுமல்ல, புத்தாக்கம், விடாமுயற்சி, தொலைநோக்கு சிந்தனைகளுக்கான மறுவடிவமாக உள்ளது. சவால்களும், ஏமாற்றங்களும் நிறைந்த அவரது வாழ்கை ஏற்ற இறக்கங்கள் மிக்கது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் சவால்கள்:
பிப்ரவரி 24, 1955 அன்று சான் பிரான்சிஸ்கோவில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த சிறிது நேரத்திலேயே தத்தெடுக்கப்பட்டார். கலிபோர்னியாவின் மவுண்டன் வியூவில் வளர்ந்தார்.
அவரது வழக்கத்திற்கு மாறான சிந்தனை எப்போதும் பாரம்பரிய கல்வி முறையுடன் ஒத்துப்போகவில்லை. இது பள்ளியில் அவரது ஆரம்பகால போராட்டங்களுக்கு வழிவகுத்தது.
நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட பின்னடைவுகள் உட்பட பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மீதான ஜாப்ஸின் ஆர்வம் ஒருபோதும் குறைந்துவிடவில்லை. அவர் ரீட் கல்லூரியில் இருந்து வெளியேறினார். அறிவு மற்றும் சுய முன்னேற்றத்திற்கான அவரது தேடலை விரிவு செய்தார்.
ஆப்பிளின் பிறப்பு
1976 ஆம் ஆண்டில், ஸ்டீவ் ஜாப்ஸ், அவரது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோருடன் இணைந்து, ஜாப்ஸ் குடும்ப கேரேஜில் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கினார். தனிநபர்கள் எளிமையாக உபயோகிக்கும் பயனர் நட்பு கணினிகளை உருவாக்குவதே அந்நிறுவனத்தின் நோக்கமாக இருந்தது.
ஆப்பிள் I மற்றும் ஆப்பிள் II ரக கணினிகளின் வெளியீடு தனிக்கணினி வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்தது. ஜாப்ஸின் மாறுபட்ட சிந்தனையும், செயல்பாடுகளும் ஆப்பிள் நிறுவனத்தை அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது.
ஏற்ற இறக்கம்!
ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆரம்ப வெற்றி இருந்தபோதிலும், நிறுவனத்திற்குள்ளேயே அரசியல் அதிகார போட்டிகளை ஜாப்ஸ் எதிர்கொண்டார். இது அந்நிறுவனத்தில் இருந்து 1985ஆம் ஆண்டு ஜாப்ஸ் வெளியேற காரணமாக அமைந்தது.
தோல்வியால் துவண்டு போகாமல், ஜாப்ஸ் நெக்ஸ்ட் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து, பின்னர் பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோவைக் கைப்பற்றினார். Toy Story, A Bug's Life மற்றும் Finding Nemo போன்றவை அங்கு உருவாக்கப்பட்டவைதான்.
இருப்பினும், 1997 ஆம்க் ஆண்டில் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்குத் திரும்பினார். அவரது தலைமையின் கீழ், ஆப்பிள் ஐமாக், ஐபாட், ஐபோன் மற்றும் ஐபாட் போன்ற அற்புதமான தயாரிப்புகள் தொழில் நுட்ப உலகில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது. மைத்தது.
ஸ்டீவ் ஜாப்ஸ் அக்டோபர் 5, ஆம் தேதி 2011 அன்று காலமானார். அவரது மரணம் தொழில்நுட்ப உலகையும் தாண்டி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு தொழில்நுட்ப மேதை மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளராக அறியப்பட்டார். அவரது நேர்காணல்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனைகள்:-
1. "உங்கள் வேலை உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்பப் போகிறது. மேலும் உண்மையிலேயே திருப்தி அடைவதற்கான ஒரே வழி, பெரிய வேலை என்று நீங்கள் நம்புவதைச் செய்வதே. அந்த பெரிய வேலையைச் செய்வதற்கான ஒரே வழி, நீங்கள் செய்வதை நேசிப்பதே."
2. "புத்தாக்கம் ஒரு தலைவனையும் பின்பற்றுபவரையும் வேறுபடுத்துகிறது."
3. “பசியுடன் இருங்கள், முட்டாள்தனமாக இருங்கள்.”
4. “உங்கள் நேரம் குறைவாக உள்ளது, எனவே வேறொருவரின் வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.”
டாபிக்ஸ்