Devara Trailer: மிரட்டும் தேவாரா டிரெய்லர்.. அதகளப்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப்.. கியூட் லவ்வராக ஜான்வி!
Devara Trailer: மிரட்டும் தேவாரா டிரெய்லர்.. அதகளப்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர், சைஃப்.. கியூட் லவ்வராக ஜான்வி!
Devara Trailer: தேவாரா பகுதி 1 பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே வரவேற்பினைப் பெற்று வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தேவாரா பகுதி 1. இப்படம் உலகமெங்கும் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்ட ஒரு பிரமாண்டமான நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
வெளியிடப்பட்ட தேவாரா பகுதி 1 டிரெய்லர் ஆனது, 2 நிமிடங்கள் 39 விநாடிகள் ஓடுகிறது. இந்த கதையில் சைஃப் அலிகானின் கதாபாத்திரமும் அவனது ஆட்களும் தைரியத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால்,ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தின் வருகை, சைஃப் அலிகான் மற்றும் அவரது குழுவினருக்குப் பயத்தைக் கொடுக்கிறது. அப்போது ரத்தத்தால் கடல் முழுவதும் சிவப்பான கதை என லீட் கொடுக்கப்படுகிறது.
தேவரா: பகுதி 1 டிரெய்லரின் ஹைலைட்ஸ்:
இருவரும் நட்புடன் இருப்பதுபோல் தோன்றினாலும், சைஃப் கதாபாத்திரம் அவர்களுக்கு பயத்தை கற்பித்த ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தை தோற்கடிக்க ஒரு நீண்டகால திட்டத்தை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரத்தினை காதலிக்கிற ஒரு கிராமத்து பெண்ணாக ஜான்வி காட்டப்படுகிறார். ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரமான தேவாரா, தனது தந்தையைப் போல இல்லை என்பதை டிரெய்லர் சுட்டிக்காட்டினாலும், தேவைப்படும்போது துணிந்து சண்டைபோடவும் செய்கிறார்.
தேவாரா: பகுதி 1 புரோமோஷன் பணிகள் மும்பையில் துவக்கம்:
மும்பையில் இருந்தபோது, ஜூனியர் என்.டி.ஆர் தனது ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த இணை நடிகை ஆலியா பட் மற்றும் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோரை சந்தித்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து இருந்தனர். அவற்றில், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா மற்றும் கரண் ஆகியோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனர்.
வேறு சில புகைப்படங்களில், அவர்கள் அரட்டை அடிப்பது தெரிகிறது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கரண் இருவரும் சாதாரண நீல நிற கோட் அணிந்து இருந்தனர். அதே நேரத்தில் ஆலியா ஒரு கருப்பு ஆடை மற்றும் பொருத்தமான ஹீல்ஸை அணிந்து இருந்தார். இவர்கள் மூவரும் தேவாரா படம் குறித்து பேசிய வீடியோ விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் சாதனை:
இந்தியாவில் டிக்கெட் விற்பனை துவங்கவில்லை என்றாலும், தேவாரா: பகுதி 1 வட அமெரிக்காவில் முன் விற்பனையில் $1 மில்லியனைத் தாண்டியுள்ளது. வரும் செப்டம்பர் 26ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக வட அமெரிக்காவில், தேவாரா - பகுதி 1 படத்தின் பிரீமியர் காட்சிகள் நடைபெறும். இந்தியாவில் டிக்கெட் விற்பனை தொடங்கும்போது, படம் எத்தகைய வரவேற்பினைப் பெறும் என்பதைப் பார்க்க வேண்டும்.
தேவரா பகுதி 1
ஜூனியர் என்.டி.ஆர் தேவரா: பகுதி 1 படத்தில் தேவரா மற்றும் வரதாவாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சைஃப் அலிகான், குஷ்தி நிபுணர் பைராவா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜான்வி தங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ஃபியர் சாங், மற்றும் தாவுடி ஆகிய மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கலவையான எதிர்வினைகளைப் பெற்றன. தேவாரா படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தொடர்புடையை செய்திகள்