தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthi Reaction: ‘தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பது தவறான வார்த்தை பிரயோகம்’: தனுஷ் விவகாரத்தில் கோபமான கார்த்தி

Karthi Reaction: ‘தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பது தவறான வார்த்தை பிரயோகம்’: தனுஷ் விவகாரத்தில் கோபமான கார்த்தி

Marimuthu M HT Tamil

Jul 30, 2024, 08:54 AM IST

google News
Actor Karthi Reaction: தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று தனுஷ் விவகாரத்தில் கோபமான கார்த்தி தெரிவித்து இருக்கிறார்.
Actor Karthi Reaction: தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று தனுஷ் விவகாரத்தில் கோபமான கார்த்தி தெரிவித்து இருக்கிறார்.

Actor Karthi Reaction: தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று தனுஷ் விவகாரத்தில் கோபமான கார்த்தி தெரிவித்து இருக்கிறார்.

Actor Karthi Reaction: தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருக்கும் நிலையில், இனிவரும் காலங்களில் புதிய திரைப்படங்களின் பணிகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியானது. மேலும், வரும் 16.08.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

தனுஷ் விவகாரம் பற்றி பேசிய கார்த்தி:

இந்நிலையில் பதிலடி கொடுக்கும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி செய்தியாளர்களை நேற்று இரவு(ஜூலை 29) சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘’திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சங்கமும் எப்போதுமே ஒரு நல்ல உடன்பாடில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருக்கிறோம். இதுக்கு முன்னாடி தயாரிப்பாளர்கள் பிரச்னை, நடிகர்கள் சார்ந்த பிரச்னை எப்போது கலந்து ஆலோசித்து இரு பக்கமும் குழுக்கள் அமைக்கப்பட்டுத்தான் முடிவுகள் எடுக்கப்பட்டு வந்திருக்கு. 

இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்கம் பத்திரிகை செய்தியாக ஒரு அறிக்கையை வெளியில் விட்டிருக்கிறது. அதில் நடிகர் தனுஷ் பற்றியும் சொல்லியிருக்கிறது. யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக புகாரை அறிவிச்சிருக்காங்க. அதில் ஒரு புகாரும் அதுபோக ஒரு வேலை நிறுத்தமும் அவர்களாக முடிவு எடுத்திருக்காங்க. அது சம்பந்தமாக தலைவர் நாசரிடமும், செயலாளர் விஷாலிடமும் வீடியோகான்ஃபரன்ஸிங் மூலம் பேசி முடித்துவிட்டு, அதுதொடர்பாக நாங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறோம். தயாரிப்பாளர் சங்கம் திடீர்னு எடுத்தமுடிவு, எங்களுக்கு ரொம்ப வருத்தமளிக்குது. அதற்கான மேற்கண்ட தீர்மானங்கள், அடுத்த செயல்குழுவில் நிச்சயம் முடிவு எடுத்துச்செயல்படுவோம்.

இதுவரை பேசிய ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில்கள் அளிக்கப்பட்டு வந்தன. அந்தப் பிரச்னைகள் தீர்வு காணப்பட்டே வந்திட்டு இருக்கோம். இந்த தருணத்தில் அவர்கள் சொன்ன புகார், எங்களுக்கு புகாராகவே வரவில்லை. எழுத்துப்பூர்வமாக எந்தவொரு புகாரும் வராத சூழலில், தயாரிப்பாளர்கள் சங்கம் எழுத்துப்பூர்வமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான விளக்கத்தை நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் கேட்டு இருக்கிறோம்.

’தனுஷ் பற்றி எந்தவொரு புகாரும் எங்களுக்கு வரவில்லை’:

தயாரிப்பாளர்கள் பக்கம் இருந்து வந்த அனைத்துப் புகார்களுக்குப் பதில் கொடுத்திருக்கோம். நடிகர்கள் மீது கொடுத்தாலும் பதில் கொடுக்க ரெடியாக இருக்கிறோம். தனுஷுடைய புகார் என்பது இதுவரை எங்களிடம் இல்லை. தயாரிப்பாளர்கள் அவர்கள் தரப்பு புகார்களை இதுவரை எங்களிடம் கொடுத்து வந்தனர். நாங்களும் நடிகர் தரப்பு புகார்களை அவர்களிடம் கொடுப்போம். பிரச்னை சரியாகிடுவோம். தற்போது தனுஷ் விவகாரத்தில் அப்படியில்லை.

அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து தனுஷூடன் பணியாற்றமுடியாது என தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருப்பது தவறான வார்த்தை பிரயோகம் என்று நினைக்கிறேன். அந்த முன்னெடுப்பே தவறான விஷயம். அது எதுக்காக அந்த விஷயம் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. சூட்டிங்கை நிறுத்தப்போறாத சொல்றது, எத்தனையோ தொழிலாளர்கள் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம்.

அது எப்படி அவர்களே முடிவு எடுக்கமுடியும்ங்கிறது சந்தேகப்படும்படியான விஷயம். யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் வேலை நிறுத்தம் முடிவு எடுக்கக்கூடாது அப்படிங்கிறது தான் எங்க கோரிக்கை’’ என்றார். 

கொந்தளித்த கருணாஸ்:

அதன் தொடர்ச்சியாகப் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகி கருணாஸ், ‘’இப்படி ஒரு முடிவுஎடுக்கும்போது எல்லா சங்கங்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எடுக்கவேண்டும் என்பது தான் மரபு. கடந்த காலங்களில் எல்லாம் அப்படிதான் நடந்து இருக்கு. இப்போது தன்னிச்சையாக ஒரு முடிவினை தயாரிப்பாளர் சங்கம் அறிவிச்சிருக்கிறதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்குது.

அதேமாதிரி நடிகர்கள் பலரும் ஒவ்வொரு படத்துக்கும் டேட்டை கொடுத்திருக்கும்போது நடிகர்களின் படத்தை முடக்கிறது என்பது நியாயமற்ற செயல்'' என்றார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி