தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karunas: கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!

Karunas: கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு!

Aarthi Balaji HT Tamil
Jun 02, 2024 01:13 PM IST

Karunas: விமான நிலைய பாதுகாப்பை கருணாஸ் மீறியதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு
கருணாஸ் பையில் 40 துப்பாக்கி குண்டுகள்.. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் நடிகர் கருணாஸ்.

இந்நிலையில் கருணாஸ் சொந்த விஷயத்திற்காக சென்னையில் இருந்து திருச்சி செல்ல இருந்தார். இதற்காக அவர் சென்னை விமான நிலையத்துக்கு இன்று ( ஜூன் 2 ) சென்று இருந்தார்.

விமான நிலையத்தில் சோதனை

அவரிடம் இருந்த கை பையை வழக்கம் போல் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திடீரென சோதனை செய்த போது அலாரம் ஒலி எழுப்பியது. இதனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரது கை பையை சோதனை செய்த போது அதில் 40 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. தைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக அவரது பயணத்தை ரத்து செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

உரிமம் இருக்கிறது

கருணாஸிடம் துப்பாக்கி குண்டுகள் அவர் கை பையில் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதற்கு அவர் தன்னிடம் துப்பாக்கி பயன்படுத்தும் உரிமம் இருப்பதாக கூறி ஆவணங்களை காண்பித்து உள்ளார்.

மேலும் விமானத்தை பிடிக்க அவசரமாக வந்த காரணத்தினால் பையில் இருந்த துப்பாக்கி குண்டு எடுத்து வைக்க மறந்துவிட்டதாக கூறினார்.

இருப்பினும் விமான நிலைய பாதுகாப்பை அவர் மீறியதால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

நடிப்பு, அரசியல்

கருணாஸின் நிஜப்பெயர் கருணாநிதி சேது என்பதாகும். சினிமாவுக்காக அதை சுருக்கி, அதே நேரத்தில் ஸ்டைலிஷான கருணாஸ் என்ற பெயருக்கு மாறினார். தற்போது நடிப்பு, அரசியல் என இரண்டையும் சமநிலையுடந் செய்து வருகிறார். கானா பாடல் பாடகராக வாழ்க்கையை தொடங்கி நடிகர், அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் பாப் பாடகராகவும், நாட்டுப்புற இசைக்கலைஞராகவும் இருந்து வந்தார் கருணாஸ். 12 வயதில் இருந்தே கானா பாடல்களை பாடி வந்த கருணாஸ், 90ஸ்களில் பிரபல டிவி நிகழ்ச்சியாக யுகி சேது தொகுத்து வழங்கிய நய்யாண்டி தர்பாரில் இசைக்கலைஞராக இருந்தார். இவரது கானா பாடல்களால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் பாலா நந்தா படத்தில் நடிக்க வைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்