Dhanush on Raayan movie: ‘ஓம் நமச்சிவாய..’- ராயன் என்னுடைய பெரிய பிறந்தநாள் பரிசு..’-ராயன் வெற்றி குறித்து நடிகர் தனுஷ்!
Dhanush: திரைத்துறையினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தை சார்ந்த நண்பர்கள், மற்றும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். - நடிகர் தனுஷ்!
Dhanush: தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “என்னுடைய பிறந்த நாளுக்கு என்னை வாழ்த்திய பார்வையாளர்கள், திரைத்துறையினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடகத்தை சார்ந்த நண்பர்கள், மற்றும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ராயன் படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றி, இதுவரை நான் கொண்டாடிய பிறந்தநாள்களில் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு ஆகும்.
ஓம் நமச்சிவாயா
அன்புடன்
தனுஷ்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக, இரண்டாவது முறையாக தனுஷ் இயக்குநராக களம் இறங்கி இருக்கும் ராயன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அவரின் 50 வது திரைப்படமாகவும் அமைந்திருக்கும் இந்தப்படத்தில், அவருடன் இணைந்து சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு என்ன?
ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி, குடும்பத்திற்கு அண்ணனாக மட்டுமல்லாமல், ஒரு அப்பாவாகவும் இருந்து, தன் இரு தம்பிகளையும், தங்கையையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறான் காத்தவராயன். இதற்கிடையே, அவனின் இரண்டாவது தம்பியான முத்துவேல் ராயன் குடித்து விட்டு, அடுத்தடுத்து பிரச்சினைகளை இழுத்து வருகிறான்.
அப்படி வரும் ஒரு பிரச்சினையில், ஏரியாவில் முக்கிய புள்ளி ஒருவனின் மகன் கொல்லப்படுகிறான். அதற்கு பழி தீர்க்க, அந்த கும்பல் முத்துவை கொலை செய்வதற்கு திட்டமிட, முந்திக்கொள்ளும் காத்தவராயன், தன் தம்பிகளோடு சேர்ந்து, அந்த கும்பலை ஒட்டு மொத்தமாக கருவறுக்கிறான். அவன் கையில் எடுத்த கத்தி அவனை எங்கு கொண்டு நிறுத்தியது?.. இறுதியில் அவன் செய்தது என்ன? இதற்கிடையில், பெரும் திட்டத்துடன் களமிறங்கும் போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி நிறைவேறியதா? இந்த களேபரத்திற்கு நடுவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ராயன் தங்கை கல்யாணம் என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பட த்தின் கதை!
நடை, உடை, பாவனை என அனைத்திலும் கறார் அண்ணனாகவும், உறவுக்கு ஒன்று என்றால் திமிறி எழும் அசுரனாகவும், நடிப்பில் மிரட்டி இருக்கிறார் தனுஷ். கதாபாத்திரத்திற்கு தேவையான இறுக்கத்தில், இம்மியும் மாறாமல் அவர் படம் முழுக்க வந்தது, அவரது அனுபவ முதிர்ச்சியை காண்பித்தது. தம்பிகளாக சந்தீப் மற்றும் காளிதாஸ், தங்கையாக துஷாரா, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை துல்லியமாக கடத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக துஷாரா, ஆக்ஷனில் காட்டிய ஆக்ரோஷம் மிரட்டல். சூழ்ச்சி வலையை விரிக்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ், அந்த கதாபாத்திரத்திற்கே உண்டான பாடிலாங்குவேஜில், அவர் வலம் வரும் போதெல்லாம் .. ஏனோ நெஞ்சம் படபடக்கிறது. வில்லனாக எஸ். ஜே. சூர்யா, வழக்கம் போல் வில்லத்தனத்திலும், அவருக்கே உண்டான லூட்டித்தனத்திலும் ஸ்கொர் ஸ்கோர் செய்திருக்கிறார். அபர்ணா - சந்தீப் காதல் அழகு!
இயக்குனராக ஜொலித்தாரா தனுஷ்?
தான் இயக்குநராக அறிமுகம் ஆன பவர் பாண்டி திரைப்படத்தில் மென்மையான கதை களத்தை தேர்வு செய்திருந்த தனுஷ், இந்தப்படத்தில் முழுக்க, முழுக்க ஆக்ஷன் கதை களத்தை கையில் எடுத்திருக்கிறார். கதாபாத்திர தேர்வு, அதற்கான டீடெய்லிங், அதன் வடிவமைப்பு, கதாபாத்திரங்களிடம் நடிப்பை வாங்கி இருக்கும் விதம், சுவாரசியம் குறையாத திரைக்கதை என அனைத்திலும், இயக்குநராக தனுஷ் ஸ்கோர் செய்திருக்கும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்