தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மொத்த வன்மத்தையும் கக்கிய ஜெயம் ரவி.. புட்டு புட்டு வைத்த சம்பவங்கள்.. வைரலாகும் வீடியோ!

மொத்த வன்மத்தையும் கக்கிய ஜெயம் ரவி.. புட்டு புட்டு வைத்த சம்பவங்கள்.. வைரலாகும் வீடியோ!

Oct 25, 2024, 11:01 AM IST

google News
ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இருக்கும் தனது நண்பர்கள் குறித்தும், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது குறித்தும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இருக்கும் தனது நண்பர்கள் குறித்தும், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது குறித்தும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் இருக்கும் தனது நண்பர்கள் குறித்தும், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது குறித்தும் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் என்றால் அது ஜெயம் ரவி தான். முதலில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்காக பேசப்பட்டு வந்த அவர், பின் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிய உள்ளதாக அறிவித்ததால் அதிகளவில் பேசப்பட்டார்.

விவாகரத்து அறிவிப்பு

மனைவி ஆர்த்தியும் அவரது தாயும் சேர்ந்து தன்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தன் மீது சந்தேகப்படுவதுடன், தனக்கான எந்த உரிமைகளையும் அளிக்காமல், என் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டனர் என அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

மறதியான விஷால்

அந்த வீடியோவில், தனது நண்பர்களான விஷால், ஆர்யா, கார்த்தி ஆகியோர் குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் தொகுப்பாளர் உங்கள் டீமில் நியாபக மறதியான ஆள் என யாரைக் கூறுவீர்கள் என கேள்வி எழுப்பி இருப்பார். இதைக் கேட்ட ஜெயம் ரவி கொஞ்சமும் யோசிக்காமல் விஷால் என பதிலளித்திருப்பார். பல விஷயங்களை தலைக்குள் ஓடவிட்டிருக்கும் அவர், எந்த விஷயத்தை எங்கு பேசினோம் என்பதையே மறந்துவிடுவார் எனக் கூறினார்.

ஓட்ட வாய் ஆர்யா

உங்கள் குழுவில் உள்ள ஓட்ட வாய் யார் எனக் கேட்டிருப்பார். அதற்கு அவர் நடிகர் ஆர்யாவின் பெயரை கூறியிருப்பார். அவரை ஓட்ட வாய் என கூற முடியாது. அவர் மிகவும் கேசுவலாக பொது வெளியில் அவர் பேசிவிடுவார் எனக் கூறினார். யாருக்கும் பெரிதாக முக்கியத்துவம் எல்லாம் தரத் தேவையில்லை. யாராவது வந்து கேட்டால், அவர்களிடம் உண்மையை சொல்லி விடலாம் எனக் கூறி அசால்டாக பேசி மாட்டி விடுவார் என்றார்.

பழம் கார்த்தி

உங்கள் குழுவில் யார் மிகவும் பழம் எனக் கேள்வி எழுப்பி இருப்பார். அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி கார்த்தியின் பெயரை கூறியிருப்பார். கார்த்தி மிகவும் நல்லவர். அவர் மிகவும் சேட்டையானவர் தான். ஆனால், அவர் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க மாட்டார். மற்றவர்கள் விஷயத்தை பற்றி பெரிதாக பேசவும் மாட்டார். அவருக்கு தெரிந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார் எனக் கூறினார்.

உருட்டு ஜீவா

மிகவும் உருட்டிக் கொண்டிருக்கும் நபர் யார் எனக் கேள்வி எழுப்பியிருப்பார். அதற்கு அவர் நடிகர் ஜீவாவை கூறியிருப்பார். நாம் ஒன்றைக் கேட்டால், அவர் ஒன்றைப் பற்றி பேசி வருவார் என தனது நண்பர்கள் குறித்து மிகவும் சுவாரசியமாக பேசியிருப்பார். இவரது இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை