Radhika SarathKumar: கேரவனில் ரகசிய கேமரா.. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் - ராதிகா கிளப்பிய பகீர்-hidden cameras in caravan says radhika sarathkumar about malayalam industry - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika Sarathkumar: கேரவனில் ரகசிய கேமரா.. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் - ராதிகா கிளப்பிய பகீர்

Radhika SarathKumar: கேரவனில் ரகசிய கேமரா.. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் - ராதிகா கிளப்பிய பகீர்

Aarthi Balaji HT Tamil
Aug 31, 2024 12:29 PM IST

Radhika SarathKumar: ஷூட்டிங் காரவான்ஸில் சீக்ரெட் கேமராக்கள் இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் பகீர் பேட்டி அளித்துள்ளார்.

Radhika SarathKumar: கேரவனில் ரகசிய கேமரா.. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் - ராதிகா கிளப்பிய பகீர்
Radhika SarathKumar: கேரவனில் ரகசிய கேமரா.. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் - ராதிகா கிளப்பிய பகீர்

மலையாள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வந்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

இந்த அறிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு துறையிலும் உள்ள நடிகர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். 

இது தொடர்பாக பேசிய ராதிகா சரத்குமார், “ நிறைய விஷயங்களை என் காலகட்டத்தில் இருந்து நான் இப்போது வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது மலையாள திரை உலகில் மட்டுமில்லை. அனைத்து திரையுலகிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

கேரவனில் ரகசிய கேமரா

மலையாளத்தில் நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் ஒரு குழுவை சேர்ந்த ஆண்கள் அமர்ந்து போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பார்த்து சிரிக்கிறார்கள் என்று தமிழ் நபர் ஒருவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். கேரவனில் நடிகைகள் உடை மாற்றுவதை ரகசியமாக கேமரா வைத்து படம் பிடித்து அதை அனைவரும் அமர்ந்து பார்க்கிறார்கள். எந்த நடிகை பெயர் சொன்னாலும் அவர்களிடம் அந்த வீடியோ இருக்கிறது என்று சொன்னார். இதை கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு தெரிந்த அனைத்து நடிகைகளுக்கும் சொல்லி முன்னெச்சரிக்கை செய்தேன்.

தனியாக ஹோட்டலில் அறை

கேரவன் இல்லாத காலகட்டத்தில் நாங்கள் நான்கு பேர் துணி குடித்துக் கொண்டு மரத்திற்கு பின்னால் உடையை மாற்றி இருக்கிறோம். அப்போதெல்லாம் யாரும் இப்படி இல்லை. இது போன்ற சம்பவம் கேள்விப்பட்டவுடன் நான் தனியாக ஹோட்டலில் அறை எடுத்து தான் உடைகளை மாற்றி வருகிறேன்.

காலையில் நான் செல்போன் பார்த்தேன். அப்போது ஒரு நான்கு பேர் இருந்து ஒரு வீடியோவில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்தியாளர்கள் கூட இல்லை. ஆனால் அவர்கள் நடிகைகள் எல்லாம் இப்படி தான் இருப்பார்கள் என்று அவர்கள் பற்றி அவதூறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

செருப்பால் அடிக்க வேண்டும்?

அவர்களை விஷால் போய் செருப்பால் அடிக்க வேண்டும்? நானும் உடன் செல்ல தயாராக இருக்கிறேன்? பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட் தொடர்பாக சொல்லுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தானே தலைமையின் பொறுப்பு “ என்று சரமாரியாக கேள்வி கேட்டு உள்ளார்.

இதை பார்த்த சிலர் இந்த விஷயங்கள் ஏற்கனவே தெரிந்த ராதிகா சரத்குமார் எதனால் அதை தைரியமாக சொல்லாமல், இப்போது சொல்கிறார் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.