வசூல் வேட்டையை தொடங்கிய பிளாக்! கம்பேக் கொடுத்த ஜீவா!
நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான பிளாக் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜீவா நடித்து கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி பிளாக் படம் ரிலீசானது. ரஜினியின் வேட்டையன் படத்துடன் நேரடியாக பிளாக் திரைப்படம் எதிர்பார்த்த வசூல் அளிக்காது என பல தரப்பினரும் கூறி வந்த நிலையில் மக்களின் அமோக வரவேற்பை ஒட்டி படம் வெற்றி படமாக ஓடி வருகிறது. கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக் படமாக பிளாக் உருவாகியுள்ளது. இதன் ஒரு சில காட்சிகள் தமிழ் திரைத்துறைக்கு ஏற்றவாறு சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்படத்தினை இயக்குநர் கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இந்த படம் இருவரை மட்டுமே சுற்றி நிகழும் கதையாக நகர்கிறது. மேலும் இப்படத்தில் இவர்களுடன் விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷியாம் சி. எஸ் இசையமைத்துள்ளார். திகிலூட்டும் காட்சிகள், சாம் சி. எஸ் இன் அதிரடி இசை என படத்திற்கு பலம் தருகின்றன. படம் வெளியான போது விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வந்த பிளாக் தற்போது ரசிகர்களின் மனதையும் கவரத் தொடகியுள்ளது.
அதிகரித்த தியேட்டர்களின் எண்ணிக்கை
பிளாக் படம் ரிலீசான முந்தைய நாள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் வெளியாகி இருந்தது. மேலும் வேட்டையன் படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுக்கபட்ட நிலையில், தற்போது பிளாக் படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. முதல் மூன்று நாட்களில் பிளாக் படம் மொத்தமாக சுமார் ரூபாய் 1.77 கோடி வசூல் செய்துள்ளதாக sacnilk வலைத்தளம் அறிவித்துள்ளது. மேலும் நான்காவது நாளான நேற்று மட்டும் சுமார் ரூபாய் 35 லட்சத்தை வசூல் செய்துள்ளது. ஓட்டு மொத்தமாக 4 நாட்களில் ரூபாய் 2.12 கோடி வசூலை அள்ளியுள்ளது. மேலும் குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் தியேட்டருக்கு வருவது குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் மழை காரணமாக தியேட்டர் வரவு குறையும் எனக் கூறப்படுகிறது.