Cheyyaru Balu:''ஜெய்பீம்'' படம் கோடிக்கணக்கில் வசூல்.. கதை மாந்தர்களை கண்டுகொள்ளாத சூர்யா.. கிழித்த செய்யாறு பாலு!
May 01, 2024, 02:54 PM IST
Cheyyaru Balu Reacts JaiBhim RealStory Persons: ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை மாந்தர்களுக்கு, ஒரு உதவியும் செய்யாத முன்னணி நடிகர் பற்றி செய்யாறு பாலு விமர்சித்தார்.
Cheyyaru Balu Reacts JaiBhim RealStoryPersons:‘’ஜெய்பீம்'' படத்தின் உண்மையான மாந்தர்களுக்கு, ஒரு வீடு கூட தயாரிப்புக்குழு கட்டிக்கொடுக்கவில்லை என பத்திரிகையாளர் செய்யாறு பாலு விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, செய்யாறு பாலு தனது யூட்யூப் சேனலில் அளித்த பேட்டியில், ‘’ஜெய்பீம் படத்தோட உண்மையான கதை மனுஷி, பார்வதி ராஜேந்திரன். ஜெய்பீம் படம் நிறைய வெற்றி அடைஞ்சிருச்சு. சமீபத்தில் அவர்கள் வாழ்ந்த வீட்டைப் பற்றிய இரண்டு புகைப்படங்களைப் பார்த்தேன். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த படம், நிறைய வசூலைக் குவித்திருக்கு. ஆனால், அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை.
சமீபகாலமாக, கதைத்திருட்டு பரவலாக நடக்கிறது. முன்பு தேவர் ஃபிலிம்ஸில் கதை இலாகா என்ற பிரிவே இருந்தது. மூலக்கதை எழுதியவர் குறித்த பெயரைப் போடுவார்கள். எழுத்தாளர்களிடம் எல்லாம் பணம் கொடுத்து கதையை வாங்குவார்கள். தற்போது நாளடைவில் அது இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது.
’ஜெய்பீம்’ பட நிஜ கதைமாந்தர் பற்றி நண்பரிடம் விசாரிக்கையில், பார்வதி ராஜேந்திரனுக்கு பத்து லட்ச ரூபாய் கொடுத்திருப்பதாகச் சொன்னார்.
‘’ஜெய்பீம்'' படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல், தற்போது ரஜினியை வைத்து ‘வேட்டையன்’ என்ற படத்தினை எடுத்துக்கொண்டு இருக்கிறார்.
விருத்தாச்சலம் அருகே எழுத்தாளர் கண்மணி குணசேகரனிடம் சென்று, ‘’எலிவேட்டை'' என்னும் தலைப்பில் படம் எடுக்கப்போகிறோம். இருளர் இன மக்களின் வட்டாரவழக்கை எழுதிக்கொடுக்கச்சொல்லி கேட்டு வாங்கியுள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் செக் அவருக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால், இவர்களிடம் சொன்ன கதையை அப்படியே மாற்றி வேறு கதையாக, அந்த வட்டார வழக்குகளைப் பயன்படுத்தி மட்டும் படம் எடுத்துள்ளனர். இதனால், எழுத்தாளர் கண்மணி குணசேகரன் மிகவும் வருத்தப்பட்டார்.
‘’ஜெய்பீம்'' படத்தினை அமேசான் பிரைம் ரூ.45 கோடிக்கு வாங்கியதாகத் தகவல் கிடைத்துள்ளது. கலைஞர் டிவி, இப்படத்துக்குண்டான சாட்டிலைட் உரிமையை ரூ.10 கோடிக்கு வாங்கியிருப்பார்கள். மொத்தத்தில் சூர்யாவின் சம்பளம் இல்லாமல், ரூ.8 கோடியில் ஜெய்பீம் எடுக்கப்பட்டுள்ளது.
நொய்டா திரைப்பட விழாவில் ‘’ஜெய்பீம்’’ திரைப்படம் ரூ.30 லட்சம் சன்மானம் பெற்றுள்ளது. பாஸ்டன் திரைப்பட விழாவில் ஜெய்பீமுக்கு ரூ.30ஆயிரம் டாலர்கள் கிடைத்துள்ளன என நமக்குத் தெரிந்தவர்கள் புள்ளிவிவரங்களைக் கூறுகின்றன. சீனாவில் ஹண்டிங் ஃபிலிம் ஃபெஸ்டிவலில், இப்படம் கம்யூனிஸம் பேசும் படம் எனச்சொல்லி அதனை அந்த திரையிடலில் பங்கெடுக்க வைத்துள்ளனர். இப்படியாக பல்வேறு திரையிடலில் பெரும்தொகையை ‘’ஜெய்பீம்''திரைப்படம் சம்பாதித்துள்ளது. படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள், இருளர் நலநிதிக்காக ரூ.1 கோடி செக் தருகிறார்கள். ஆனால், அது அந்த அமைப்பே இல்லையென்று, அப்படியே திரும்பி வந்துடுச்சு. இதை ஒரு தன்னார்வலர் என்னிடம் சொன்னார்.
இப்போது ‘ஜெய்பீம்’கதையில் நிறைமாத கர்ப்பிணியாக நடித்துக்காட்டப்படும், உண்மையான கதைமாந்தரான பார்வதி ராஜேந்திரனின், கணவன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டு, லாக்கப்பில் கொன்று, தமிழ்நாடுக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் உள்ள எல்லையில் போடப்பட்டபோது, இடதுசாரி வழக்கறிஞர் அதை வெளியில் கொண்டு வருவார்.
அந்த நிறைமாத கர்ப்பிணியாக நடித்த அந்த நடிகை படம் முடித்து போய்விட்டார். அந்த உண்மையான கதை மாந்தரான உயிரோடு இருக்கும் பார்வதி ராஜேந்திரனுக்கு, ஒரு நடிகர் அங்கு சென்று வீடுகட்டி கொடுத்துவிடுவோம் என்று பப்ளிசிட்டி தேடிக்கொண்டார். ஆனால், அவங்களுக்கு இப்போது வீடு இருந்திருக்கணுமே?.
சரி பத்து லட்ச ரூபாய் கொடுத்திருக்காங்கல்ல,பிறகு அப்படின்னு கேட்கலாம். அதை அவர்கள் அந்த அம்மாவின் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக வைத்துள்ளனர். அதில் என்னபெரிய வட்டி வந்துவிடப்போகிறது. கோடிக்கணக்கில் சம்பாதிச்சிங்கள்ல, ஒரு நியாயத்தைச் சொல்லுங்கள். ‘ஜெய்பீம்’ உடைய மூலக்கதை அவங்க தாங்க. கன்டென்ட் பார்வதி ராஜேந்திரன் தாங்க.
நீங்கள் மும்பையில் போய் செட்டில் ஆகுங்க. நீங்கள் நியூயார்க்கில் போய் செட்டில் ஆகுங்கள். வேணாம் அந்த பாவம். உதவி பண்ண என்ன ஆயிடப்போகுது, உங்களுக்கு.
சமூக நிதி பேசுன இயக்குநர் த.சே.ஞானவேல் இயக்கும், ’ வேட்டையன்’ படத்தை விட ‘கூலி’ படத்துக்கு வரவேற்பு அதிகமாக இருக்கு.
ஒரு சாமானியப் பெண்ணுடைய கதையை எடுத்திருக்கீங்க. அவர்கள் வீடு இல்லாம கஷ்டப்படுறாங்க.பார்த்துக்கங்க’’ என்றார்.
டாபிக்ஸ்