தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat: ‘தி கோட் படத்தின் 2வது பாடல் இப்படி இருக்கும்.. படம் இதைத்தான் சொல்லும்..’: நடிகர் அஜ்மல் சொன்ன ரகசியம்

The GOAT: ‘தி கோட் படத்தின் 2வது பாடல் இப்படி இருக்கும்.. படம் இதைத்தான் சொல்லும்..’: நடிகர் அஜ்மல் சொன்ன ரகசியம்

Marimuthu M HT Tamil

Apr 30, 2024, 04:55 PM IST

Ajmal Spoke About The GOAT: நடிகர் அஜ்மல், தி கோட் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Ajmal Spoke About The GOAT: நடிகர் அஜ்மல், தி கோட் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Ajmal Spoke About The GOAT: நடிகர் அஜ்மல், தி கோட் படம் குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Ajmal Spoke About The GOAT: நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் அடுத்த பாடல் நிச்சயம் காதல் பாடலாக இருக்கும் என அப்படத்தில் நடித்த நடிகர் அஜ்மல் கூறியுள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

அம்மா இல்லாமல் வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? மனிதநேயம் இறந்து கொண்டிருக்கிறது.. நடிகை கல்யாணி உருக்கம்!

Thalapathy 69 : வெளியானது தளபதி 69 குறித்த நியூ அப்பேட்.. தளபதி-69 ல் நடிக்கும் பிரபல மலையாள நடிகை? யார் தெரியுமா?

Director Murali Abbas: வாயை விட்டு வாங்கி கட்டிய ரஜினிகாந்த்.. குளிரில் வாட்டி எடுத்த மணிரத்னம்.. - முரளி அப்பாஸ்

20 Years Of Aayutha Ezhuthu: 3 வெவ்வேறு கதைகள் இணைந்து கல்லூரி மாணவர் அரசியல்வாதியானால் ‘ஆயுத எழுத்து’

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.

தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.

அதேபோல், விஜய் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது. அதற்கும் தீனிபோடும் வகையில் திலீப் சுப்புராயன் மாஸ்டர், தி கோட் திரைப்படத்துக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேலும், இத்திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு அக்டோபர், 2023ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மேலும், இப்படத்தினை 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். சமீபத்தில் ‘தி கோட்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், விசில் போடு, ஏப்ரல் 14 சித்திரை முதல் நாளை ஒட்டி ரிலீஸ் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ‘’தி கோட்'' படத்தில், விஜய்யுடன் சேர்ந்து நடித்த நடிகர் அஜ்மல் அளித்த பேட்டியில், ‘’ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் என்டெர்டெயினர் ஆக இருக்கும். இரண்டாவதாக வெளியிடப்படும் பாடல் கண்டிப்பாக காதல் பாடல் ஆக இருக்கும். 

இப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர் கலந்துகொண்டாரா இல்லையா என்பது குறித்து நான் சொல்லமாட்டேன். இதனை தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தான் உறுதிப்படுத்தவேண்டும். இந்தப் படம் குடும்பத்தில் இருப்பவர்களின் அன்பு, பாசம், சண்டை ஆகியவற்றை வைத்து உருவாகியுள்ள மாஸ் எண்டெரெயின்மெண்ட் திரைப்படம்’’ என பேட்டியளித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி