Venkatesh Bhat: களத்துல சந்திப்போம் தாமு.. விஜய் டிவிக்கு போட்டியாக இறங்கிய வெங்கடேஷ் பட்! வளைத்துப்போட்ட சன் டிவி!
அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் கமிட் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக, சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது

சன் டிவியில் வெங்கடேஷ் பட்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. அதில் நடுவர்களாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சமையல் கலைஞர்களான தாமுவும், வெங்கடேஷ்பட்டும்.
கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி, 5 ஆவது சீசனை நோக்கி நகர்ந்தது.
சமையலில் கண்டிப்பாக இருக்கும் இவர்கள், போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகள், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கின்றன. கிட்டத்தட்ட 4 சீசன்களை நிறைவு செய்த இந்த நிகழ்ச்சி, 5 ஆவது சீசனை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில்தான் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும், புது நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி, வெங்கடேஷ் பட் அறிக்கை வெளியிட்டார். கூடவே அந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் வெளியேறினார்.
