13 Years Of Ko: பத்திரிகையாளர்களால் நிகழும் ஆட்சி மாற்றம்.. தவறான நபரின் தலைமையை ஊடக இளைஞர் என்ன செய்தார் என்பதே 'கோ’
Apr 22, 2024, 10:39 AM IST
- கோ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது தொடர்பான கட்டுரை..
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா, பியா பாஜ்வாய் ஆகியோர் நடித்து, ஏப்ரல் 22ஆம் தேதி 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான், கோ. இப்படத்துக்கான இசையை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார். ஒளிப்பதிவினை ரிச்சர்ட் எம். நாதன் செய்திருந்தார்.
கோ திரைப்படத்தின் கதை என்ன? அஸ்வின் குமார், தின அஞ்சல் செய்தித்தாளில் வேலைசெய்யும் புகைப்பட பத்திரிகையாளர். உள்ளூர் வங்கியில் நக்ஸலைட்டுகள் கொள்ளையடிப்பதை துரத்திச் சென்று படம்பிடிக்கிறார். அப்போது கொள்ளையர்கள் அவரது கேமராவை பறிக்க முயற்சிக்கின்றனர். இதையறியாத ரேணுகா என்னும் பெண், அவன் திருடன் என நினைத்து, அவனைப் பிடித்து, அவரது கேமராவை நக்ஸலைட்டுகள் பெற உதவுகிறார். இருந்தாலும், கேமராவில் இருந்த மெமரி கார்டை லாவகமாக எடுத்துவிடுகிறார், அஸ்வின். அவனது புகைப்படங்கள் தின அஞ்சல் செய்தித்தாளில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன. அதன்பின், அங்கு வரும் புகைப்பட பத்திரிகையாளர் அஸ்வினின் செயல்பாடுகளுக்கு, சக பத்திகையாளர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கிறது. இது புதிதாக ’தின அஞ்சல்’ செய்தித்தாளில் பணிக்குச் சேர்ந்த ரேணுகாவுக்கு தர்மசங்கடம் ஆகிறது. தற்போது அஸ்வின், ரேணுகாவைப் பற்றி அறிந்துகொள்கிறாள். பத்திரிகையாளர் என அறிந்ததுமே, ரேணுகா மீது அஸ்வினுக்கு காதல் வந்துவிடுகிறது. இதனிடையே அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சரஸ்வதி என்கிற ‘சரோ’வும், அஸ்வினை ஒரு தலையாகக் காதலிக்கிறார்.
இதற்கிடையே ஆளவந்தான் என்னும் எதிர்க்கட்சித்தலைவர் பற்றிய தில்லுமுல்லுகளை தோலுரிக்கும் கட்டுரைகளை எழுதுகிறார், ரேணுகா என்கிற ரேணு. இந்த கட்டுரை வெளியானதும் தனது ஆட்களுடன் தின அஞ்சல் அலுவலகத்துக்கு வந்து மிரட்டுகிறார், ஆளவந்தான். மேலும் இதற்கு ஆதாரமாக இருந்த வாய்ஸ் ரெக்கார்டிங்கினை திருகு வேலை செய்து அழித்துவிடுகிறார், ஆளவந்தான். இதனால் சரியான ஆதாரமின்றி செய்திக்கட்டுரை வெளியிட்டதாக, ரேணு பணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
இது இப்படியிருக்க புகைப்பட பத்திரிகையாளர் அஸ்வின், ஆளவந்தான் செய்யும் குழந்தைத் திருமணம் பற்றிய புகைப்படங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்து, தின அஞ்சல் அலுவலகத்துக்கு கொண்டு வருகிறார். அப்போது செய்தி வெளியாகிறது. இதன்மூலம் ரேணுவுக்கு பறிக்கப்பட்ட வேலை மீண்டும் கிடைக்கிறது.
இதற்கிடையே அஸ்வின் மற்றும் ரேணுவும் காதலிக்கத்தொடங்குகின்றனர். மேலும் சரோவும், இவர்களின் காதலைப் புரிந்துகொண்டு, அஸ்வின் மீதான தன் ஒரு தலைக் காதலை விடுகின்றார்.
இதற்கிடையே வசந்தன் என்னும் இளைஞர், சிறகுகள் என்னும் கட்சியைத் தொடங்கி, மக்களுக்கான அரசியலை செய்ய முனைகிறார். ஆனால், இதற்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. பின், தின அஞ்சல் குழுவினர், சிறகுகள் அமைப்பு பற்றிய பாஸிட்டிவான விஷயங்களை கட்டுரையாக்கி வெளியிடுகின்றனர். இது மக்களிடம் ஆதரவாகப் பெருகுகிறது. இவ்விவகாரம் முதலமைச்சர் யோகேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆளவந்தான் ஆகியோருக்கு எரிச்சலைத் தருகிறது.
இதற்கிடையே , வசந்தன் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. அப்போது அதில் படுகாயமடைந்த சரோ, ஏதோ ஒன்றினை சொல்ல வந்து இறந்துவிடுகிறார். இன்னொரு புகைப்படக்காரர் பதிவுசெய்த வீடியோ கிளிப்பின் மூலம் சரோவை முகம் தெரியாத நபர் அடித்து கொல்வதைக் கண்டுபிடிக்கிறார். சரோவை கொன்றது நக்ஸலைட் தலைவர் என அஸ்வின் நினைக்கிறார்.
ஒரு நாள் வசந்தனும் அஷ்வினும் கல்லூரித்தோழர்கள் என்பது ரேணுவுக்குத் தெரிகிறது. பின்னர் மகிழ்ந்த ரேணு, வசந்தன் குறித்த கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதுகின்றார். பின் தேர்தலில் வெற்றிபெற்று, வசந்தன் முதலமைச்சர் ஆகிறார். மேலும் பதவியேற்றபின் 20 நக்ஸலைட்டுகளை ரிலீஸ் செய்வதாகவும் கூறுகிறார், வசந்தன்.
இதனால் அதிர்ச்சியடையும் அஸ்வின், வசந்தனிடம் இதுகுறித்து பேச நினைக்கிறார். அவரது பேச்சு எடுபடவில்லை. அதன்பின் நக்ஸலைட் தலைவர் கதிருக்கும், முதலமைச்சர் வசந்தனுக்கும் இடையே தேர்தலை ஒட்டி நடந்த டீலிங்கினை கண்டறிகிறார், அஸ்வின். குடிசை எரிந்தது அதில் வசந்தன் மக்களுக்கு உதவியது; வெடிகுண்டு வெடித்து அதில் வசந்தன் தப்பியது எல்லாம் மக்களின் ஆதரவைப் பெற என்பதை அஸ்வின் உணர்ந்து கொண்டார்.
இந்த வாக்கு மூலத்தை நக்ஸலைட் தலைவர் கதிர் சொல்ல, ரேணுகாவுக்கு போன்மூலமாகப் பதிவுசெய்து அனுப்புகிறார், அஸ்வின்.
அப்போது வசந்தன் வந்து நக்ஸலைட் தலைவர் கதிரை கொல்கிறார். பின், பதவி வெறியில் அஸ்வினையும் கொல்ல முயற்சித்து, இறுதியில் வசந்தன் இறந்துவிடுகிறார். அஸ்வின் தப்பிக்கிறார். பின், வசந்தனின் அமைச்சர்கள், ஆதரவாளர்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் உண்மையானவர்கள் என்பதை உணரும் அஸ்வின், வசந்தனை பற்றிய விஷயத்தை வெளிப்படுத்தவேண்டாம் என்று ரேணுவிடம் கூறுகிறார். பின், ரேணுவும் அதனை பாஸிட்டிவாக கட்டுரையாக்கிவிடுகின்றார்.
அஸ்வினும் ரேணுவும் தங்களது பணியை ராஜினாமா செய்கின்றனர். ஆனால், தின அஞ்சல் ஆசிரியர், அவரது ராஜினாமா கடிதத்தை நிராகரித்து, அடுத்த முதலமைச்சர் குறித்த கட்டுரையை ரெடிசெய்யும் படி கேட்கிறார். படம் முடிகிறது.
இப்படத்தில் அஸ்வினாக ஜீவாவும், வசந்தனாக அஜ்மல் அமீரும், ரேணுவாக கார்த்திகாவும், சரோவாக பியோ பாஜ்வாயும் நடித்து இருக்கின்றனர். மேலும் நக்ஸல் தலைவராக போஸ் வெங்கட்டும், ஆளவந்தானாக கோட்டா சீனிவாச ராவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய அம்சங்களாக இசையும் ஒளிப்பதிவும் பார்க்கப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற என்னமோ ஏதோ, கல கல, வெண்பனியே, அக நக, அமளிதுமளி ஆகிய 5 பாடல்களும் இசைக்காக, அவை எடுக்கப்பட்ட லொகேஷன்களுக்காகவும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அடிப்படையில் இயக்குநர் கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்தவர் என்பதால், ரிச்சர்ட் எம்.நாதனை விரட்டி விரட்டி வேலை வாங்கியிருக்கிறார் என்பது காட்சிகளில் மிளிர்ந்தது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, இந்தப் படம் 50 கோடி ரூபாய் வசூலித்தது.
படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனாலும் இன்று பார்த்தாலும் மிகவும் துல்லியமான காட்சியமைப்பு இன்றும் பொருந்தும் கதையமைப்பினால், ஈர்க்கிறார்,கோ
டாபிக்ஸ்