தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ’கோ' பட நாயகி கார்த்திகாவுக்கு திருமணம் - சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து

’கோ' பட நாயகி கார்த்திகாவுக்கு திருமணம் - சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து

Marimuthu M HT Tamil
Nov 19, 2023 06:52 PM IST

நடிகை கார்த்திகாவுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது

நடிகை கார்த்திகா நாயரின் திருமண புகைப்படங்கள்
நடிகை கார்த்திகா நாயரின் திருமண புகைப்படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் 80களில் உச்ச நடிகையாகத் திகழ்ந்தவர், நடிகை ராதா. நடிகை அம்பிகாவின் சகோதரி. இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டப் பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் நடிகை ராதா மும்பை தொழிலதிபர் ராஜசேகரனை திருமணம் முடித்த நிலையில் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அதில் மூத்த மகளான கார்த்திகா நாயருக்கும், காசர்காட்டை சேர்ந்த ரவீந்திரன் மேனன் - ஷர்மிளா தம்பதியரின் மகன் ரோஹித். இவர்கள் இருவருக்கும் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் காவடியார் உதயா பேலஸ் கன்வென்ஷன் ஹாலில் வைத்து இன்று திருமணம் நடைபெற்றது. இதில் தெலுங்கின் நம்பர் ஒன் நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை சுஹாசினி மணிரத்தினம், ராதிகா, ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், மேனகா, இயக்குநர் பாக்யராஜ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டப் பல்வேறு திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதேபோல், கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நடிகை கார்த்திகா ஜோஷ் என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின், கோ என்னும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக தனது முதல் அடியை எடுத்து வைத்தார். கோ படம், கார்த்திகாவின் திரைவாழ்வில் முக்கியப் பங்கினை வகித்தது. பின், மலையாளத்தில் மகரமஞ்சு என்னும் படத்திலும், தமிழில் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்னும் படத்திலும் நடித்திருந்தார். பின் சில ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு புறம்போக்கு என்னும் பொதுவுடைமை என்னும் படத்தில் நடித்தார்.

பின் சில ஆண்டுகளுக்குப் பின், இந்தியில் சீரியலில் நடிக்கத் தொடங்கினார், கார்த்திகா. பின் சிலகாலம் நடிப்புக்கு முழுக்குபோட்ட  கார்த்திகா, ரோஹித் என்பவரை இன்று திருமணம் செய்துள்ளார்.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்