என்ன ஆச்சு.. ஏ.வி.எம். நிறுவனம் ஏன் படம் தயாரிக்கவில்லை: திரைமறைவில் இருக்கும் பல ரகசியங்கள்.. விளக்கும் பத்திரிகையாளர்
Oct 07, 2024, 05:29 PM IST
என்ன ஆச்சு.. ஏ.வி.எம். நிறுவனம் ஏன் படம் தயாரிக்கவில்லை: திரைமறைவில் இருக்கும் பல ரகசியங்கள்.. விளக்கும் பத்திரிகையாளர்
ஏ.வி.எம். நிறுவனம் ஏன் படம் தயாரிக்கவில்லை மற்றும் அதற்கான திரைமறைவு காரணம் இதுதான் என சினிமா பத்திரிகையாளர் துளசி பாண்டியன் விளக்குகிறார்.
பத்திரிகையாளர் துளசி பாண்டியன் திரைக்கூத்து யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘’இப்போது ஏ.வி.எம். நிறுவனம் ஏன் படம் செய்யவரவில்லை. 176 படங்களுக்கு மேல் தயாரித்தவர்கள் ஏன் படம் தயாரிக்க முன் வரவில்லை. அதுகுறித்துப் பார்ப்போம். எல்லா ஹீரோவும் இப்போது கால்ஷீட் கொடுக்கத் தயாராக இருக்காங்க. எல்லா இயக்குநர்களும் இவங்க சொன்னால், படம் இயக்கத் தயாராக இருக்காங்க. அப்படி இருக்கும்போது, வெளியில் இருந்து நாங்கள் பணம் தருகிறோம். ஏ.வி.எம்.பேனரில் எடுத்துக்கொடுங்க அப்படின்னு கேட்டுட்டு இருக்காங்க, பல பேர். பல கார்ப்பரேட் கம்பெனிகள் உங்கள் பேனரிலேயே எடுத்துக்கொடுங்க அப்படின்னு நடையா நடந்துட்டு இருக்காங்க.
ஏ.வி.எம் நிறுவனத்தின் நிலை:
உண்மையிலேயே என்ன நடந்தது. ஏ.வி.எம் ஸ்டுடியோவே அடியோடு மாறிப்போயிடுச்சு. அதற்குக் காரணம் என்னவென்றால், அன்றைக்கு இருந்த கலைஞர்கள், இயக்குநர்கள் இடையே திட்டமிடல் சரியாகத்தான் இருக்கும். ரிலீஸ் தேதியை சொல்லிட்டுப் பூஜை போடுவாங்க. அதை நம்பிதான் டிஸ்டிரிபியூட்டர் எல்லாம் பணம்கட்டுவாங்க. ஜனவரி மாதம் பூஜை போடுறாங்க என்றால், ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்திடுவாங்க. அதை நம்பி எல்லாருமே வேலைசெய்வாங்க. பெரிய நடிகர்கள் எல்லாருமே கால்ஷீட் கொடுத்திடுவாங்க. எவ்வளவு நடிகர்களை உருவாக்கி இருப்பாங்க. ஹிந்தி நடிகர் ராஜ் கபூர், சிவாஜி கணேசன், கமல்ஹாசனில் இருந்து பல பேரை உருவாருக்கி இருப்பாங்க. கன்னட நடிகர் ராஜ்குமாரை அறிமுகப்படுத்தினது ஏ.வி.எம். தான். வைஜெயந்தி மாலாவை அறிமுகப்படுத்தினது, ஏ.வி.எம். ஸ்டுடியோ தான். விஜயகுமாரி, நமீதா, ரம்பா போன்ற பல படங்களை ஹீரோயினியாக அறிமுகப்படுத்தினது, ஏ.வி.எம். தான். பல ஹீரோக்கள், பல டெக்னீஷியன், பல இயக்குநர்களை உருவாக்கி இருப்பாங்க. அப்பேர்ப்பட்ட நிறுவனம், இன்றைக்கு படம் எடுக்காமல் இருக்குன்னு சொல்லி தான் பல பேர் கேட்கிறாங்க. அல்லி அர்ஜூனாவில் இருந்து சிவாஜி மற்றும் முதல் இடம் வரை 176 படங்கள் தயாரித்து இருக்காங்க. இவ்வளவு படம் ஏ.வி.எம். எடுத்திருக்காங்க.
நடித்தவர்கள் எல்லோரும் முன்னணி நடிகர்கள். அப்படிப்பட்ட நிறுவனம், ஏன் படம் எடுக்கலை அப்படிங்கிறதை சரவணன் சாரே பல்வேறு பேட்டிகளில் சொல்லியிருப்பார். இதில் கிருஷ்ணன் பஞ்சு, முத்துராமன் ஆகியோர் தொடர்ந்து அதிகப்படங்களை இயக்கி இருப்பாங்க. இடையே பீம்சிங், பிரகாஷ் ராஜ், சி.எஸ். நாராயணமூர்த்தி வந்து போயிருக்கார். அட்லீக்கு எல்லாம் ஏ.வி.எம்மில் படம் செய்ய ஆசை.
ஏ.வி.எம். நிறுவனத்துக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை:
அன்றைக்கு எல்லாம் முதலாளி வர்றாங்க அப்படின்னு ஹீரோவே உட்காரமாட்டங்க. ஏனென்றால், முதல் போடுறவங்க இல்லையா? எம்.ஜி.ஆர் இவங்க எல்லோரையும் முதலாளி என்று மரியாதையோடுதான் கூப்பிடுவார். ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் எல்லாம் சினிமாவின் கலங்கரை விளக்கம். இன்றைக்கு சூழ்நிலைக்கு ஒரு உதவி இயக்குநரிடம் அழைத்து படம் எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று கேட்டால் தெரியாது என்பார்கள். நடிகர்களுக்கு எல்லாம் எத்தனை நாட்கள் கால்ஷீட் தேவைப்படும் எனக்கேட்டால் தெரியாது என்பார்கள். சரி என்னப்பா தெரியும் என்று உதவி இயக்குநர்களிடம் கேட்டால், நான் படம் எடுத்திடுவேன். எவ்வளவு நாட்களில் எடுப்பேன்; எவ்வளவு பட்ஜெட் எனக்குத் தெரியாது எனச்சொல்கிறார்கள்.
படம் ஓடுமா, ஓடாதுன்னு தெரியாது. எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்க அப்படின்னு சொன்னால், பின் எப்படி தயாரிப்பாளர்கள் படத்தைத் தயாரிக்க முன்வருவாங்க. சில பேர் ஒரு பட்ஜெட் சொல்லுவாங்க, ஆனால், எடுத்து முடிச்ச பட்ஜெட் வேற. சொன்ன தேதி வேற, ரிலீஸ் பண்ற தேதி வேற. இது எல்லாமே ஏ.வி.எம்முக்கு சரியாக இருக்கணும். அது எல்லாம் பண்ணமுடியலை. போகப்போக சூழ்நிலை மாறுது அப்படின்னு தெரிஞ்சதும் படமே நமக்கு வேண்டாம் அப்படின்னு நிலைக்கு வந்துட்டாங்க.
இன்றைய சினிமா நிலை:
இப்போது எல்லாம் ஹீரோக்கள் வந்தால் புரொடியூசர் எழுந்து நிற்கும் நிலைக்கு வந்திடுச்சு. ஏனென்றால், நடிகர் அடுத்த படத்துக்கு கால்ஷீட் தரமாட்டாராம். ஒரு ஹீரோவுக்கு சம்பளம் எவ்வளவு ரூ.200 கோடி, படத்தோட பட்ஜெட் எவ்வளவு ரூ.300 கோடி. இவ்வளவு கோடி போட்டா, படம் எடுக்கிறது. என்ன லாபம் கிடைக்கும். வட்டிக்கு வாங்கி படம் எடுக்கிறவங்க நிலை எல்லாம் என்ன ஆகும். இப்படி ஒரு சூழலில் முதலை எடுக்கமுடியுமா.
இதனால் படம் எடுக்கிறதுக்கே ஏ.வி.எம்.தயங்குறாங்க. இப்போது எந்த கியாரண்டியும் இல்லை. ஒரு பீம் சிங், பி.மாதவன் இருந்தார். ஒரு பாலச்சந்தர், பாரதிராஜா இருந்தாங்க. பட்ஜெட்டில் படம் எடுத்தாங்க. திட்டமிடல் சரியாக இருக்கும். அப்போது எல்லாம் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, பேப்பர், டிவி, வானொலி எல்லா ஊடகங்களில் ஏ.வி.எம்.விளம்பரம் இருக்கும். அதற்கு ஒரு ஆல்பம் தயாரிச்சு, டிஸ்டிரிபியூட்டருக்கு அனுப்பி வைப்பாங்க. தியேட்டர் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைப்பாங்க. இது அனைவரிடமும் ரீச் கொடுக்கும். அப்படி இருந்த காலம் இப்போது மாறிவிட்டது’’ என்றார்.
நன்றி: திரைக்கூத்து
டாபிக்ஸ்