Story Of Song : பாரதிராஜா மனதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்.. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் உருவான கதை!
16 வயதினேலே படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் இன்றளவும் ஒலிக்கும் விதமாகவும், ரசிக்கும் விதமாகவும் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளன.இப்படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.

Story Of Song : பாரதிராஜா மனிதில் நினைத்ததை பாட்டில் சொன்ன கண்ணதாசன்.. ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் உருவான கதை!
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜாவின் முதல் படம். அதுமட்டுமல்ல பாரதிராஜா - இளையராஜா காம்போ, கமல்ஹாசன் - இளையராஜா காம்போ, ரஜினி வில்லனாக தோன்றிய முதல் கலர் படம் என பல்வேறு முதல் விஷயங்களை உள்ளடக்கிய படமாக 16 வயதினேலே உள்ளது.
கிராமத்தில் வாழும் 16 வயது பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் நல்லதும், கெட்டதுமான சம்பவங்கள் தான் படத்தின் ஒன்லைன். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாச அனுபவத்தை தந்தது இந்தப் படம்.
கங்கை அமரன் பாடலாசிரியராக அறிமுகம்
இந்தப் படத்துக்கு கண்ணதாசன், கங்கை அமரன், ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்கள் எழுத இளையராஜா இசையமைத்திருந்தார். கங்கை அமரன் இந்த படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.