Namitha Love Story: 13 ஆண்டு கால காதல்.. நடிகை நமீதாவுக்கு நடந்த பிரேக்அப்.. யார் அந்த பெரும்புள்ளி!
- Namitha Love Story: தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர், நடிகை நமீதா. 13 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் ஒரு முறை பிரிவு ஏற்பட்டதாகவும் அவர் தன் காதல் குறித்து ஈடிவி தெலுங்கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
- Namitha Love Story: தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர், நடிகை நமீதா. 13 ஆண்டுகால காதல் வாழ்க்கையில் ஒரு முறை பிரிவு ஏற்பட்டதாகவும் அவர் தன் காதல் குறித்து ஈடிவி தெலுங்கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
(1 / 6)
(2 / 6)
இதைத்தொடர்ந்து நடிகர் சத்யராஜூடன் இணைந்து இவர் நடித்த மகாநடிகன் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியது. அதன் பின், நடிகர் சரத் குமாருடன் இணைந்து 'ஏய்' என்னும் திரைப்படத்தில் அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் வரும் அர்ஜூனா அர்ஜூனா என்னும் பாடலில் மிகவும் நெருக்கமாக நடித்ததன் மூலம், தமிழ்நாட்டின் கட்டழகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். படமும் ஹிட்டானது. நடிகர் சரத் குமார் - நமீதாவின் கெமிஸ்ட்ரி படத்தில் நன்குவொர்க் அவுட் ஆகியது. அதன்பின், நடிகர் சரத் குமார் - நமீதா ஜோடியைப் பலரும் திரையில் விரும்பினார்கள்.
(3 / 6)
மகாநடிகன் திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் சத்யராஜூடன் இணைந்து இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் ஆகிய படங்களில் நடித்தார், நடிகை நமீதா. சரத் குமார் - நமீதா ஜோடிபோலவே, சத்யராஜ் - நமீதா ஜோடியும் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. இந்த படங்கள் எதுவும் தோல்விப் படங்களாக நிச்சயம் அமையவில்லை. அப்போது நடிகர் சரத்குமாருக்கும் நமீதாவையும் இணைத்து வைத்தும் நடிகர் நமீதாவையும் சத்யராஜையும் இணைத்து வைத்து கிசுகிசுக்கள் வரத்தொடங்கின.
(4 / 6)
2004ஆம் ஆண்டிலிருந்து நடிகை நமீதாவும் ஹைதராபாத்தைச் சார்ந்த தொழிலதிபர் வீரேந்திர செளத்ரி என்பவரும் காதலில் இருந்து வந்துள்ளனர். 2007-ல் நடிகை நமீதாவுக்கும் வீரேந்திர செளத்ரிக்கும் இடையில் ரகசிய நிச்சயம் நடைபெற்றுள்ளது.
அதில், 2011ல் திருமணம் செய்துவைக்க பெரியோர்களால் நிச்சயக்கப்பட்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த திருமணம் 2011ல் நடக்காமல் முடிவுற்றுள்ளது.
(5 / 6)
பின், அந்த காதலை நமீதாவும் வீரேந்திரா செளத்ரியும் மறக்கமுடியாமல் தவித்து வந்துள்ளனர். 2014 டிசம்பர் 31ல் தங்களது பழைய பிரேக் அப் கதைகளை முடித்துவிட்டு, மீண்டும் இருவரும் ஜோடியாக சேர்ந்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளனர்.
மற்ற கேலரிக்கள்