Rajinikanth: ‘அன்னைக்கே ரஜினி அப்படி வருவார்ன்னு தெரியும்.. முட்டித்தூக்கிய முரட்டுக்காளை உருவான விதம்!- ஏ.வி.எம் குமரன்
Rajinikanth: இன்னொரு விஷயம் அவர் பெருமாள் என்ற ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை உடன் வைத்திருந்தார். அவர்தான் அவருக்கு தினமும் இன்று, இந்தக்காட்சி தான் எடுக்கப் போகிறோம் என்பதை விவரிப்பார். - முரட்டுக்காளை உருவான விதம்! - ஏ.வி.எம் குமரன்

Rajinikanth: முரட்டுக்காளை திரைப்படம் உருவான விதம் குறித்து ஏவிஎம் குமரன் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது, “களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தை முதலில் பிரபல தெலுங்கு இயக்குநரான பிரகாஷ் ராவ்தான் இயக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த படத்தில் அவருக்கும், எங்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு விட்டன.
இன்னொரு விஷயம் அவர் பெருமாள் என்ற ஒரு அசிஸ்டன்ட் டைரக்டரை உடன் வைத்திருந்தார். அவர்தான் அவருக்கு தினமும் இன்று, இந்தக்காட்சி தான் எடுக்கப் போகிறோம் என்பதை விவரிப்பார். அந்த தகவல் பரிமாற்றத்திலேயே சில சிக்கல்கள் இருந்ததை எங்களால் உணரமுடிந்தது. இதையடுத்துதான் நாங்கள் எங்களுக்கென்று ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் வேண்டும் என்று நினைத்து எஸ்.பி. முத்துராமனை கமிட் செய்தோம்.
முத்துராமனின் திறமை
அதன் பின்னர் அவர் அந்த படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்க்க, பீம்சிங் அந்த படத்தை இயக்கினார். அப்படித்தான் முத்துராமன் எங்களுக்கு பழக்கமானார். இதனையடுத்து அவர் இயக்குநராக மாறினார். எங்கள் நிறுவனத்தை தாண்டி, பல நிறுவனங்களிடம் சென்று படங்களை இயக்கினார்.