24 Years of Kushi : வெள்ளி விழா ஆண்டை நெருங்கும் எஸ்.ஜே.சூர்யா, விஜய், ஜோதிகாவின் மாஸ்டர் பீஸ் ‘குஷி’
May 19, 2024, 05:30 AM IST
24 Years of Kushi : வெள்ளி விழா ஆண்டை நெருங்கும் எஸ்.ஜே.சூர்யா, விஜய், ஜோதிகாவின் மாஸ்டர் பீஸ் ‘குஷி’ திரைப்படம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் வெளியாகி 24 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தப்படம் ரொமாண்டிக் காமெடி படமாக உருவானது. இந்தப்படத்தை ஏ.எம். ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரித்திருந்தது. இந்தப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம். தற்போது விஜய், அஜித் முன்னாளில் நடித்த சில படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் ரீரிலீஸ் செய்யப்படும் படங்களின் பட்டியலில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படங்களில் குஷியும் ஒன்று.
குஷி படத்தின் கதை
விஜய் – ஜோதிகா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். அவர்கள் நட்புடன் பழகி வருவார்கள். அப்போது இருவரிடையேயும் காதல் மலரும். ஆனால், அதை யார் முதலில் கூறுவது என்பதில் இருவரிடமும் ஈகோ மோதல் ஏற்படும். இதனால் அவர்களிடையே நிறைய புரிதலின்மைகள் மற்றும் சண்டைகள் ஏற்படும்.
காதலில் சிக்கித்தவிக்கும் மனம், அதை சொல்லத்துடிக்கும் ஈகோ என படம் நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும். காமெடிக்கு விவேக், கிளாமருக்கு மும்தாஜ் என படத்தில் கமர்ஷியல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும். இந்தப்படம் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோதும், நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் காம்பினேஷனில் உருவான முதல் திரைப்படம்.
விஜய் மற்றும் ஜோதிகா ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படம் குஷி. வாலி படத்தை பார்த்தபின்னர் ரத்னம் குஷி படத்தின் வாய்ப்பை எஸ்.ஜே.சூர்யாவுக்கு வழங்கினார். இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு ஷில்பா ஷெட்டி நடனமாடியிருப்பார். இந்தப்படத்தின் சூட்டிங், கண்ணுக்குள் நிலவு படத்தின் சூட்டிங் இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது. இதனால் இரு வேறு கதாபாத்திரங்களில் உடனுக்குடன் மாறி மாறி நடிப்பதில் இருந்த சிக்கல் குறித்து விஜய் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார்.
பாடல்கள் எப்படி?
படத்தின் மேகம் கருக்குது, மேக்கரீனா மேக்கரீனா, ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாத்தேன், மொட்டு ஒன்று மலர்ந்தி மறுக்கும், கட்டிப்புடி கட்டிப்புடிடா, ஓ வெண்ணிலா ஆகிய பாடல்கள் அனைத்தும் இன்றும் கேட்பதற்கு இதமானவை மட்டுமின்றி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவையாகும்.
இந்தப்படம் குறித்த கதை திரித்து கூறப்பட்டபோது, இது ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படம் என்று தயாரிப்பாளர் தரப்பு உறுதிப்படுத்தியது. இந்தப்படம் வெளியான கோடை காலத்தில் மக்களுக்கு நல்ல பொழுபோக்கு படமாக இருந்தது. இந்தப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.
2001ம் ஆண்டு இந்தப்படம் தெலுங்கி பவன் கல்யாண், பூமிகா சாவ்லாவின் நடிப்பில் வெளியானது. தெலுங்கிலும் இந்தப்படத்திற்கு குஷி என்றே பெயரிடப்பட்டது. அங்கும் வணிக ரீதியாக இந்தப்படம் வெற்றி பெற்றது. நேர்மறையான விமர்சனங்களை கொடுத்தது.
இந்தப்படத்தை இந்தியில் எஸ்.ஜே.சூர்யா இயக்கினார். அதை போனி கபூர் தயாரித்திருந்தார். ஃபர்தீன் கான், கரினா கபூர் நடித்திருந்தார்கள். இந்தப்படம் விஜய் – ஜோதிகாவை ரசிகர்கள் விரும்பும் இணையர்களாக்கியது.
வெள்ளி விழா ஆண்டை நெருங்கும் இந்தப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை ஹெச்.டி தமிழ் பகிர்ந்துகொள்கிறது.
டாபிக்ஸ்