67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  67 Years Of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 17, 2024 06:30 AM IST

காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதையாக சிவாஜி கணேசன், பானுமதி, தேவிகா, சந்திரபாபு உள்ளிட்டோர் நடித்த மணமகன் தேவை படம் உள்ளது. தேவிகா அறிமுகமான இந்த படத்தில் தான் புகழ் பெற்ற கிளாசிக் பாடலான பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்துள்ளது.

பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த மணமகன் தேவை படம்
பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த மணமகன் தேவை படம்

ஆள்மாறாட்ட கதை

பெரிய பணக்காரரின் மகளான பானுமதிக்கு தனது தந்தை பார்க்கும் பணக்கார மாப்பிள்ளை திருமணம் செய்ய விருப்பம் இல்லை. மாறாக புரொபோசரான சிவாஜியை திருமணம் செய்ய விரும்புகிறார். இதற்காக தான் ஒரு இரட்டை சகோதரி என ஆள் மாறாட்டம் செய்து போலி அடையாளத்தை உருவாக்குகிறார். அதுவே விணையாக அவர் பிரச்னையில் சிக்க கொள்கிறார். இறுதியில் சிவாஜி கணேசன் - பானுமதி ஒன்று சேர்ந்தார்களா என்பதை நகைச்சுவை, காதல் கலந்து சொன்ன படமாக மணமகன் தேவை படத்தை உருவாக்கியிருப்பார்கள்.

படத்தில் டி.ஆர். ராமசந்திரன், சந்திரபாபு, கருணாநிதி, தேவிகா, ராகிணி, கே.டி, சந்தானம் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.

வலம்புரி சோமநாதன் திரைக்கதை எழுத, பி.எஸ். ராமகிருஷ்ணா ராவ் இயக்கியிருப்பார். 1952இல் வெளியான அமெரிக்க படமான தி பேபுலஸ் செனோரிட்டா படத்தை அடிப்படையாக கொண்ட மணமகன் தேவை திரைக்கதை அமைந்திருக்கும்.

இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கிலும் உருவானது. வருடு காவாளி என்ற பெயரில் இந்த படம் தயாரானது. சிவாஜி கணேசன் கதாபாத்திரத்தில் அங்கு கொங்காரா ஜக்கையா நடித்திருந்தார்.

தேவிகாவின் முதல் படம்

தமிழ் திரையுலகில் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வரும் நடிகை, தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் கால்ஷீட் பிரச்னைகளை தராத நடிகை, ஈகோ இல்லாமல் அனைவரிடமும் தன்னடக்கத்துடன் நடந்துகொள்ளும் நடிகை என நற்பெயரை பெற்ற தேவிகா அறிமுகமானது இந்த படத்தில் தான். இவரது பெயர் படத்தின் டைட்டில் கார்டில் பிரமிளா என்று தோன்றும். இதுதான் அவரது நிஜ பெயரும் கூட.

மணமகன் தேவை படத்தில் தேவிகாவின் சகோதரியாக தோன்றி அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

சிவாஜியை நடிப்பில் பின்னுக்கு தள்ளிய பானுமதி

படத்தின் கதை வெகுஜன மக்களை கவரும் விதமாக இல்லை எனவும், நகரத்து ரசிகர்களை மையப்படுத்தி இருப்பதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. அதேபோல் சிவாஜி கணேசன் நடிப்பு திறமைக்கு தீனி போடும் விதமான விஷயங்கள் பெரிதாக இல்லை எனவும் கூறப்பட்டன. குறைகள் பல சுட்டிக்காட்டப்பட்டாலும் பானுமதியின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படத்தின் அனைவரின் நடிப்பையும் ஓவர் டேக் செய்யும் விதமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதற்கு ஏற்பட பானுமதிக்காக படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டமும் கூடியது.

பிரபலமான கிளாசிக் பாடல்

மருதகாசி, கேடி சந்தானம், தஞ்சை என். ராமையா தாஸ், ஞானம் கிருஷ்ண ஐயர் பாடல்கள் எழுத ஜி. ராமநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாகின.

சந்திரபாபு பாடி, ஆடிய பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே என்ற பிரபல கிளாசிக் பாடல் இடம்பிடித்திருப்பது இந்த படத்தில் தான்.

கமர்ஷியல் ஹிட்

கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளிவந்த இந்த படம் எதார்த்த காமெடியுடன் நிறைந்து காணப்பட்டதுடன், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. திரையரங்கில் 100 நாள்கள் வரை ஓடியதோடு சிவாஜி கணேசனின் ஹிட் பட வரிசையில் இணைந்தது. சிறந்த டைம் பாஸ் படமாக இருக்கும் மணமகன் தேவை வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.