தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தீபாவளி ரிலீசாக 11 படங்கள்..கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி! தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்

தீபாவளி ரிலீசாக 11 படங்கள்..கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி! தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்ட்

Nov 13, 2024, 11:50 AM IST

google News
தீபாவளி ரிலீசாக 11 படங்கள், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் இயக்கிய கல்ட் கிளாசிக் படங்கள், கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்
தீபாவளி ரிலீசாக 11 படங்கள், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் இயக்கிய கல்ட் கிளாசிக் படங்கள், கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்

தீபாவளி ரிலீசாக 11 படங்கள், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் இயக்கிய கல்ட் கிளாசிக் படங்கள், கிளீன் ஷாட் அடித்த தளபதி விஜய்யின் துப்பாக்கி என தமிழில் இன்று வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்

தமிழ் சினிமாவில் நவம்பர் 13ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக கடந்த 1993இல் 11 படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் தீபாவளி ரிலீஸாக வெளியான தளபதி விஜய்யின் துப்பாக்கி, அவரது சினிமா கேரியரில் முக்கியமான படமாகவும், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய படமாகவும் உள்ளது. இதுதவிர இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் இயக்கிய கல்ட் கிளாசிக் படங்கள், மம்முட்டியில் திகில் காமெடி படங்களும் இன்றைய நாளில் வெளியாகியுள்ளன. தமிழில் நவம்பர் 13ஆம் தேதி வெளியான படங்களில் லிஸ்ட் இதோ

கோடீஸ்வரன்

சிவாஜி கணேசன், வீணை எஸ் பாலசந்தர், பத்மினி பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த படம் 1955இல் வெளியானது. அந்த காலகட்டத்திலேயே வரதட்சனைக்கு எதிராக இரண்டு நண்பர்களுக்கு போராடுவதை காமெடியுடன் சொன்ன படமாக இருந்தது. ஹாச் முலாச்சா பாப் என்ற மராத்தி மொழி நாடகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. ரசிகர்களை கவர்ந்து வரவேற்பையும் பெற்று ஹிட் படமாக மாறிய கோடீஸ்வரன் வெளியாகி இன்றுடன் 69 ஆண்டுகள் ஆகிறது.

கள்வனின் காதலி

கோடீஸ்வரன் படம் வெளியான அதே நாளில் சிவாஜி கணேசனின் மற்றொரு படமாக கள்வனின் காதலி வெளியானது. கல்கி புத்தகத்தில் இதே பெயரில் வெளியான நாவலை அடிப்படையாக வைத்து காதல் கலந்த க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த படத்தை வி.எஸ். ராகவன் இயக்கியுள்ளார். படத்தில் பானுமதி, டி.ஆர். ராமச்சந்திரன், கே. சாரங்கபாணி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரசிகர்களை கவர்ந்த இந்த படம் சராசரி வெற்றியையும் பெற்றது

கலியுக கர்ணன்

பாடலாசிரியர் வாலி எழுதிய கிருஷ்ண விஜயம் என்ற நாவலை அடிப்படையாக வைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவான காமெடி படம் கலியுக கர்ணன். செளகார் ஜானகி, ஜெய்ஷங்கர், ஜெயசித்ரா, வி.கே. ராமசாமி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த நல்ல வரவேற்பையும் பெற்றதுடன் தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 1974 தீபாவளி ரிலீசாக வந்த இந்த படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிறது.

அவள் ஒரு தொடர்கதை

மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தரின் கல்ட் கிளாசிக் திரைப்படமான அவள் ஒரு தொடர்கதை பொன்விழா ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. சுஜாதா, கமல்ஹாசன், விஜயகுமார், ஃபடாபட் ஜெயலட்சுமி, ஜெய் கணேஷ் உள்பட பலர் நடித்து பேமிலி டிராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம் ட்ரெண்ட் செட்டிங் படமாகவே மாறியது. 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடிய இந்த படம் மற்ற இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் தெய்வம் தந்த வீடு, கடவுள் அமைத்து வைத்த மேடை ஆகிய பாடல்கள் இன்று சிறந்த கிளாசிக் பாடலாக ஒலித்து வருகின்றன. இந்த படத்துக்காக பாலசந்தர் சிறந்த இயக்குநர் ஃபிலிம்பேர் விருதையும் வென்றார். தமிழ் சினிமாவின் சிறந்த கல்ட் படமாக அவள் ஒரு தொடர்கதை இருந்து வருகிறது.

உழவன்

1993 தீபாவளி ரிலீஸாக வரிசை கட்டி வந்த 11 படங்களில் ஒன்றாக பிரபு, பானுப்பிரியா, ரம்பா, விக்னேஷ் உள்பட பலர் நடித்த உழவன் படம் உள்ளது. நடிகை ரம்பாவுக்கு தமிழில் இதுதான் முதல் படம். கதிர் இயக்கியிருக்கும் இந்த காதல் கலந்த ட்ராமா பாணியில் படம் சராசரி ஹிட் படமாக மாறியது. தமிழ் சினிமாவில் 90ஸ்களின் ஹிட் காம்போவாக இருந்த கதிர் - வாலி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இந்த படத்தில் தான் உருவானது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக பெண் அல்ல பெண் அல்ல ஊதாப்பு கிளாசிக் மெலடியாக இருந்து வருகிறது.

திருடா திருடா

மணிரத்னம் இயக்கத்தில் பிளாக் காமெடி மசாலா படமாக உருவாகியிருந்த திருடா திருடா 1993 தீபாவளி ரிலீஸ்களில் ஒன்றாக உள்ளது. பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், எஸ்.பி. பாலசுப்பிரமணியும், சலீம் கெளவுஸ், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரேஸ் வேக படமாக அமைந்திருக்கும். அந்த காலகட்டத்திலேயே ஸ்பெஷல் எபெக்ட்ஸ்காக தேசிய விருது வென்ற இந்த படத்துக்கு தெலுங்கு சினிமா சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் மணிரத்னத்துடன் இணைந்து திரைக்கதை எழுதியிருப்பார். படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறந்த கிளாசிக்காக இப்போது வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன

கிழக்கு சீமையிலே

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் கிராமத்து பின்னணி கல்ட் கிளாசிக் படமான கிழக்கு சீமையிலே 1993 தீபாவளிக்கு வெளியானது. அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா, விக்னேஷ், பாண்டியன், வடிவேலு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் சூப்பர் ஹிட்டானது. பாரதிராஜா படத்துக்கு முதல் முறையாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. கிராமத்து பின்னணி இசையும் தன்னால் கொடுக்க முடியும் என ஏ.ஆர். ரஹ்மான் நிருபித்த படமாக கிழக்கு சீமையிலே உள்ளது.

கிளிப்பேச்சு கேட்கவா

மலையாள இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் மம்முட்டி, கனகா, விஜயகுமார், நாசர், சார்லி, சீனு மோகன் உள்பட பலர் நடித்திருக்கு்ம இந்த படம் திகில், காமெடி, காதல் கலந்த படமாக 1993 தீபாவளிக்கு வெளியானது. ஃபாசிலுக்கும், மம்முட்டிக்கும் தமிழில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த இந்த படத்தில் இளையராஜா இசையில் அன்பே வா அருகிலே, சிவகாமி நினைப்பினிலே போன்ற பாடல்கள் அதிகமாக டிவியில் ஒலிக்கப்பட்ட பாடல்களாக இருந்தன.

கட்டபொம்மன்

சரத்குமார் சினிமா கேரியரில் முக்கிய படமாக இருந்து வரும் கட்டபொம்மன் 1993 தீபாவளி ரிலீஸ் படமாகும். மணிவாசகம் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வினிதா, கவுண்டமணி, செந்தில், நாகேஷ், ஸ்ரீவித்யா, விஜயகுமார் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். காதல், பேமிலி செண்டிமென்ட், காமெடி என அனைத்து கலந்த மசாலா படமாக உருவாகியிருந்த கட்டபொம்மன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தேவா இசையில் பிரியா பிரியா, பாலைவனத்தில் ஒரு ரோஜா போன்ற பாடல்கள் ஹிட்டாகின.

எங்க முதலாளி

பஞ்சு அருணாச்சலம் கதை, திரைக்கதை எழுத லியாகத் அலிகான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜயகாந்த், கல்தூரி, ராதா ரவி, ராஜா, நெப்போலியன், விவேக் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். 1993 தீபாவளி ரீலிஸ் படங்களில் ஒன்றான எங்க முதலாளி பார்த்த பழக்கப்பட்ட கதையாக இருந்த நிலையில் சராசரி ஹிட்டாக அமைந்தது. இளையராஜா இசையில் குங்குமம் மஞ்சளுக்கு, மருமகளே போன்ற பாடல்கள் ஹிட்டாகின

சின்ன ஜமீன்

ராஜ்கபூர் இயக்கத்தில் கார்த்திக், சுகன்யா, வினிதா, கவுண்டமணி, செந்தில், ராஜேஷ் உள்பட பலர் நடித்திருக்கும் படம் சின்ன ஜமீன். மசாலா படமாக உருவாகியிருந்த சின்ன ஜமீன், நடிகை வினிதாவின் அறிமுக தமிழ் படமாக உள்ளது. இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டானதுடன், கவுண்டமணி - செந்தில் காமெடியும் வெகுவாக ரசிக்கப்பட்டது. 1993 தீபாவளி ரிலீஸாக வந்து சராசரி ஹிட்டான படமாக சின்ன ஜமீன் உள்ளது.

துப்பாக்கி

தளபதி விஜய் - இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக கூட்டணி அமைந்து ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக 2012 தீபாவளி ரிலீஸுக்கு வந்த படம் துப்பாக்கி. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார். வித்யுத் ஜாம்வால், சத்யன், ஜெயராம் உள்பட பலர் நடித்திருந்த இந்த படம் ஸ்லீப்பர் செல் செயல்பாட்டை தடுத்து, அவர்களின் தலைவன் முறியடிக்கும் ராணுவ வீரரின் கதையாக அமைந்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விஜய்யின் சினிமா மார்கெட்டை வேறு லெவலுக்கு உயர்த்திய படமாக இருந்து வரும் துப்பாக்கி வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிறது. இந்த படம் இந்தியில் அக்சய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட்டானது.

போடா போடி

சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான ரெமாண்டிக் திரைப்படமான போடா போடி 2012 தீபாவளி ரிலீசாக வெளியானது. இந்த படம் இயக்குநர் விக்னேஷ் சிவன், வரலட்சுமி ஆகியோரின் அறிமுக படமாக உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் சராசரி ஹிட்டாகவும் அமைந்தது.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை