7 Years Of 8 Thottakkal: பறிபோன துப்பாக்கியால் தூக்கத்தைத் தொலைக்கும் காவலரின் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  7 Years Of 8 Thottakkal: பறிபோன துப்பாக்கியால் தூக்கத்தைத் தொலைக்கும் காவலரின் கதை!

7 Years Of 8 Thottakkal: பறிபோன துப்பாக்கியால் தூக்கத்தைத் தொலைக்கும் காவலரின் கதை!

Marimuthu M HT Tamil
Apr 07, 2024 10:13 AM IST

8 தோட்டாக்கள் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான கட்டுரை..

8 தோட்டாக்கள்
8 தோட்டாக்கள்

இப்படம் தமிழில் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. அதன்பின், இப்படம் கன்னடத்தில் 8 எம்எம் புல்லட் என்ற பெயரிலும், தெலுங்கில் சேனாபதி என்றும், மலையாளத்தில் கொரோனா பேப்பர்ஸ் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. அந்தளவு நல்ல கதையம்சம் கொண்ட படமாக கருதப்படுகிறது. இப்படத்தை வெள்ளப் பாண்டியன் என்பவர் தயாரித்து, தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியிருந்தார்.

8 தோட்டாக்கள் திரைப்படத்தின் கதை என்ன?:  சத்யா, ஒரு ஆதரவற்றச் சிறுவன். சிறுவனாக இருக்கும்போது, தான் வேலை செய்த முதலாளியின் மனைவி கொலை ஆன வழக்கில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார். அங்கு இருக்கும் வார்டனிடம் நட்பு பாராட்டும் சிறுவனுக்குப் போலீஸ் ஆகவேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதை உணர்ந்த அந்த வார்டன், சிறுவன் சத்யாவை ஊக்கப்படுத்துகிறான். இறுதியில் அவன் இளைஞர் ஆனவுடன், எஸ்.ஐ ஆகிவிடுகிறார்.

சத்யா, தனக்கு வழிகாட்டி வார்டனின் அறிவுரைப்படி லஞ்சம் வாங்காத நேர்மையான போலீஸாக இருக்க விரும்புகிறார். இதில் எரிச்சலாகும் லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஒரு பயங்கரமான ரவுடிக்கும்பலை தேடும் பணியில் அவரை அமர்த்துகிறார். அப்போது, சத்யா, 8 தோட்டாக்கள் போட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையினரின் துப்பாக்கியைத் தவறவிடுகிறார்.

அதன்பின், சத்யா, தனது பத்திரிகையாள தோழி மீரா உதவியுடன், துப்பாக்கியைப் பிக்பாக்கெட் அடித்த பையனைப் பிடிக்கிறான். அதற்குள், அதை வேறு ஒருவர் வாங்கி, அதனை வங்கிக் கொள்ளை முயற்சியில் ஈடுபடுத்ததை அறிகிறார். அந்த துப்பாக்கி மூலம் ஒரு சிறுமியிம் கொல்லப்பட்டதை அறிகிறார். அதன்பின், பிரச்னை வெளியில் தெரிந்து, சத்யா சஸ்பெண்ட் ஆகிறார். இந்த வழக்கை விசாரிக்கும்பொறுப்பு, பாண்டியன் என்னும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் கைக்கு செல்கிறது.

இருந்தாலும் துப்பாக்கியை வைத்து வங்கிக்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளைக்கும்பலில் ஒருவன் , தனது காதலியின் பிறந்தநாளுக்கு நகை வாங்க ஆசைப்பட்டு, நகைக்கடைக்குச் செல்கிறார். புதிதாக இருக்கும் நோட்டுகளின் சீரியல் எண்ணை வைத்து, போலீஸ் அவனை கண்காணிக்கிறது. அதன்பின் ஏற்படும் கொள்ளையர்களுக்கு இடையே ஏற்படும் மோதலில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதன்பின், கொள்ளைக்கும்பல் தலைவனை போலீஸ் கைது செய்ய முயலுகையில், தனக்குக் கீழ் பணி செய்யும் இன்னொரு கொள்ளையனை கொன்றுவிட்டு தப்புகிறான், அந்த கொள்ளைக் கும்பல் தலைவன்.

இது ஒரு புறம் இருக்க, சத்யா, கிருஷ்ணமூர்த்தி என்னும் பழைய போலீஸ்காரரை சந்திக்கிறார். அவரும் ஒரு குற்றவாளியைத் தப்பிக்க விட்ட குற்றத்திற்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். அதன்பின், இருவரும்பேசும்போது சத்யாவுக்கு, தன் துப்பாக்கியை வைத்து வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர், கிருஷ்ணமூர்த்தி தான் என்பது தெரியவருகிறது. மேலும் அவர் தான் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களின் தலைவர் எனவும் புரிகிறது.

அதன்பின், கிருஷ்ணமூர்த்தி தான் இவ்வாறுமாற காரணமாக இருந்த லஞ்சம் வாங்கும் இன்ஸ்பெக்டர் குணாவை பின் தொடர்கிறார். அதன்பின், இன்னொரு வங்கியில் கொள்ளையடித்துவிட்டு, குணாவைக் கொல்கிறார். இறுதியில், கிருஷ்ணமூர்த்தியை, பாண்டியன் மற்றும் அவரது சக போலீஸ் குழுவினர் சுற்றிவிடுகின்றனர்.

பெரிய மோதலுக்குப் பின், அக்கூட்டத்தில் இருந்து சத்யா வெளியில் வருகிறார். விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி, பாண்டியனை சுட்டுக்கொன்றதாகவும், தான், தன் பாதுகாப்புக் கருதி கிருஷ்ணமூர்த்தியை சுட்டுக்கொன்றதாகவும் சொல்கிறார், சத்யா. இறுதியில் சத்யாவிற்கு வேலை கிடைக்கிறது.

அதன்பின், மீராவுடன் பைக்கில் செல்லும்போது நடந்த உண்மைகளைச் சொல்கிறான், சத்யா. அதில், காவல் துறை அலுவலர் பாண்டியன், கிருஷ்ணமூர்த்தியின் பேரனின் தலையில் துப்பாக்கியை வைத்தார். இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, பாண்டியனை சுட்டுக்கொன்றார். அப்போது அருகில் இருக்கும் சத்யா, கோபத்தில் கிருஷ்ணமூர்த்தியுடன் சண்டை போடுகிறார். சத்யா மீது இரக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி, தன்னை நீ சுட்டுவிடு என்கிறார். அதை செய்யாமல் சத்யா தவிக்கிறார். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி தன்னைத்தானே சுட்டுக்கொல்கிறார்.

அதன்பின், படத்தின் இறுதியில் தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்த முதலாளியைப் பார்க்கிறான், சத்யா. அப்படியே படம் முடிகிறது.

இப்படத்தில் சத்யா என்னும் எஸ்.ஐ கதாபாத்திரத்தில் நடிகர் வெற்றியும், மீரா வாசுதேவன் என்னும் கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளியும், கிருஷ்ணமூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் எம்.எஸ். பாஸ்கரும், காவல்துறை அலுவலர் பாண்டியனாக நாசரும், நடித்திருந்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் குணசேகரனாக மைம் கோபியும் நடித்திருந்தார்.

இப்படத்துக்குண்டான இசையினை கே.எஸ்.சுந்திரமூர்த்தியும், ஒளிப்பதிவினை தினேஷ் கே.பாபுவும் செய்துள்ளனர். 8 தோட்டாக்கள் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவுபெற்றாலும் இன்றும் புதிய படம்போல், ஒரு ஃபீல் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.