Tamil Movies on this day: சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட்..ஆகஸ்ட் 21இல் வெளியான படங்கள் இதோ-know about the list of tamil movies released on this day - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies On This Day: சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட்..ஆகஸ்ட் 21இல் வெளியான படங்கள் இதோ

Tamil Movies on this day: சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட்..ஆகஸ்ட் 21இல் வெளியான படங்கள் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2024 07:48 AM IST

Tamil Movies on this day: ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரம் போன்ற ஹீரோக்களுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்த படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

Tamil Movies on this day: சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட்..ஆகஸ்ட் 21 ரிலீஸ் படங்கள்
Tamil Movies on this day: சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட்..ஆகஸ்ட் 21 ரிலீஸ் படங்கள்

இந்த தேதியில் சிவாஜி கணேசன் நடித்த மரகதம் மற்றும் என் மகன், ஜெய்சங்கர் நடித்த நீ, விக்ரம் நடித்த கந்தசாமி போன்ற சில படங்கள் வெளியாகியுள்ளன. மற்றபடி டாப் நடிகர்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் சமீபத்திய காலம் வரை ஆகஸ்ட் 21இல் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ

ஏகாம்பவானன் - 1947

இந்தியாவுக்கு சுதந்திரம் அடைந்த பின்னர் வெளியான தமிழ் படமாக ஏகாம்பவானன் உள்ளது. கோத்தமங்கலம் சீனு, பி.ஏ. பெரியநாயகி கதையின் நாயகி, நாயகியாக நடிக்க, கே. சாரங்கபாணி, எஸ்.வி. சுப்பையா, சி.டி. ராஜகாந்தம் படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

இது பெரியநாயகி ஹீரோயினாக நடித்த முதல் படமாகும். ஜி. ராமநாதன் இசையில் படத்தின் பாடல்களை கோத்தமங்கலம் சீனு, பெரியநாயகி ஆகியோர் பாடியிருப்பார்கள். காதல் படமான ஏகாம்பவானன் படத்தை பி.என். ராவ் மற்றும் டி.வி. கிருஷ்ணசாமி ஆகியோர் இயக்கியிருப்பார்கள்.

மரகதம் - 1959

ஏகாம்பவானன் படத்துக்கு பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இதே நாளில் வெளியான படம் மரகதம். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருாவகியிருந்த இந்த படத்தில் சிவாஜி கணேசன் - பத்மினி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருப்பார்கள்.

வீணை எஸ். பாலச்சந்தர், சந்தியா, ஜே.பி. சந்திரபாபு, டி.எஸ். பாலையா, டி.எஸ். துரைராஜ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். எம்.எம். ஸ்ரீராமலு நாயுடு இயக்கிய இந்த படத்துக்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வசனம் எழுதியிருப்பார்.

கொலை செய்யப்படும் ஜமின்தார் கொலைப்பழி அவரது சகோதரர் மீது விழுகிறது. கொலையாளி யார் என்பதை ஜமின்தார் மகன் சிவாஜி கணேசன் கண்டறியும் த்ரில்லர் கதையாக மரகதம் படம் உள்ளது.

இந்த படத்தில் தான் புகழ் பெற்ற கிளாசிக் பாடலான குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே பாடல் இடம்பிடித்துள்ளது.

நீ - 1965

மரகதம் படத்துக்கு அடுத்தபடியாக ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில், டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் நீ என்ற படம் 1965ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 21இல் வெளியானது.

காதல் கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியிருக்கும் நீ படத்தில் ஜெயலலிதா இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் தோன்றியிருப்பார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது.

அதேபோல் படத்தின் கதையே ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை சுற்றியே அமைந்திருக்கும். அவரது சினிமா கேரியரில் நல்ல பெயரை பெற்று தந்த படமாக நீ இருந்தது.

வாலி பாடல் வரிகள் எழுத எம்.எம். விஸ்வநாதன் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்து் ஹிட்டாகின. அத்துடன் நீ திரைப்படமும் ரசிகர்கள் கவர்ந்து கமர்ஷியல் சக்ஸஸ் ஆனது

என் மகன் - 1974

1972இல் பாலிவுட்டில் மனோஜ் குமார் நடிப்பில் வெளியான பீ-இமான் என்ற படத்தின் ரீமேக்காக என் மகன் படம் உருவாகியிருந்தது. ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தை சி.வி. ராஜேந்திரன் இயக்கியிருப்பார். சிவாஜி கணேசன், மஞ்சுளா நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருப்பார்கள்.

கே. பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், ஆர். மனோகர், வி.எஸ். ராகவன், வி.கே. ராமசாமி, மனோரமா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் படத்தின் பாடல்கள் அந்த காலகட்டத்தில் வரவேற்பை பெற்றன. டி.எம்.எஸ் குரலில் நீங்கள் அத்தனை பேரும் உத்தமனா என்ற சூப்பரான கிளாசிக் பாடல் இந்த படத்தில்தான் இடம்பிடித்துள்ளது

சிவாஜி கணேசனுக்கு கமர்ஷியல் ஹிட்டாக அமைந்த இந்த படம் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கந்தசாமி - 2009

சீயான் விக்ரம் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் ஓரளவு வசூலை ஈட்டிய படம் கந்தசாமி. படத்தில் ஸ்ரேயா சரண் ஹீரோயினாக நடித்திருப்பார்.

பிரபு, முகேஷ் திவாரி, ஆஷிஷ் வித்யார்த்தி, வடிவேலு, மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். சுசி கணேசன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதேபோல் வடிவேலுவின் காமெடி வரவேற்பை பெற்றன. இவரது காமெடி ட்ராக் ஹீரோவோடு இல்லாமல் தனியாக இடம்பிடித்திருக்கும்.

அனைத்து பாடல்களையும் விவேகா, தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சூப்பர் ஹிட்டாகின. படத்தின் பாடல்கள் அனைத்தையும் விக்ரம் பாடியிருப்பது தனி சிறப்பு மிக்க விஷயமாக அமைந்தது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்த படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் உள்ளது.

வண்ண ஜிகினா - 2015

தமிழ் காமெடி படமான வண்ண ஜிகினா படத்தில் விஜய் வசந்த், சான்யாதாரா, சிங்கம் புலி, ரவி மரியா பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

படத்துக்கு ஜான் பீட்டர் இசையமைத்திருப்பார். படத்தில் இடம்பிடித்த மூன்று பாடலும் ரிலீஸ் காலகட்டத்தில் வரவேற்பை பெற்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.