தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Radhika Sarathkumar: ‘ஏகப்பட்ட வரிபாக்கி!’ விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சொத்து விவரம் இதோ!

Radhika Sarathkumar: ‘ஏகப்பட்ட வரிபாக்கி!’ விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் சொத்து விவரம் இதோ!

Kathiravan V HT Tamil

Mar 26, 2024, 07:32 PM IST

google News
“கடன்களை பொறுத்தவரை சைதாப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு தனிநபர் கடனும். அதே வங்கியில் 56 லட்சம் ரூபாய்க்கு வாகன கடனும் பெற்றுள்ளார்”
“கடன்களை பொறுத்தவரை சைதாப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு தனிநபர் கடனும். அதே வங்கியில் 56 லட்சம் ரூபாய்க்கு வாகன கடனும் பெற்றுள்ளார்”

“கடன்களை பொறுத்தவரை சைதாப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு தனிநபர் கடனும். அதே வங்கியில் 56 லட்சம் ரூபாய்க்கு வாகன கடனும் பெற்றுள்ளார்”

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், 6 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டி உள்ளதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனுத்தாக்கல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வேட்புமனுத்தாக்கலில் என்ன இருக்கும்?

வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளர் மற்றும் அவரை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வங்கி வைப்புத் தொகை, நிறுவனங்களில் வைத்திருக்கும் பரஸ்பர நிதி மற்றும் நிறுவன பங்குகள், காப்பீடு குறித்த விவரங்கள், கடன் பத்திரங்கள், தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அளித்துள்ள கடன் விவரங்கள், கடன் வாங்கிய விவரங்கள், மோட்டார் வாகனங்கள் குறித்த விவரங்கள், வேட்பாளர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

சொத்து மதிப்பு

27 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும், தனது கணவரும், நடிகருமான சரத்குமார் பெயரில் 8 கோடியே 32 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்துக்களை பொறுத்தவரை, தனது பெயரில் 26 கோடியே 40 லட்சம் அசையா சொத்துக்களும், தனது கணவர் சரத்குமார் பெயரில் 21 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு அசையா சொத்துக்களூம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடன்களை பொறுத்தவரை சைதாப்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு தனிநபர் கடனும். அதே வங்கியில் 56 லட்சம் ரூபாய்க்கு வாகன கடனும் பெற்றுள்ளார்.

வருமானவரி பாக்கியை பொறுத்தவரை தனது பெயரில் 3 கோடியே 93 லட்சம் ரூபாய்க்கும், தனது கணவர் சரத்குமார் பெயரில் 3 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கும் பாக்கி உள்ளதாக கூறி உள்ளார்

ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையை பொறுத்தவரை தனது பெயரில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கும். தனது கணவர் சரத்குமார் பெயரில் 4 கோடியே 4 லட்சம் ரூபாய்க்கும் பாக்கி இருப்பதாக கூறி உள்ளார்.

அடுத்த செய்தி