தமிழ் செய்திகள்  /  Elections  /  Ht Mp Story: Background On Virudhunagar Parliamentary Constituency History And Candidates

HT MP Story: 'செலிபிரட்டி தொகுதியாக மாறிய விருதுநகர்!’ வெல்லப்போவது யார்? இதோ நிலவரம்!

Kathiravan V HT Tamil
Mar 25, 2024 07:00 AM IST

”Virudhunagar: வெநடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறி உள்ளது”

விருதுநகர் மக்களவை தொகுதி நிலவரம்
விருதுநகர் மக்களவை தொகுதி நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி!

2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சிவகாசி மக்களவைத் தொகுதிக்கு பதிலாக விருதுநகர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

இத்தொகுதியில், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்று உள்ளன. நாடார், நாயுடு, ரெட்டியார், முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகம் நிறைந்த தொகுதியாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. 

முன்னதாக சிவகாசி தொகுதியாக இருந்தபோது, சாத்தூர், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், கோவில்பட்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. 

அதிக முறை வென்ற அதிமுக! வெற்றியை பதிவு செய்யாத திமுக!

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும், மதிமுக 3 முறையும், சிபிஐ, சுதந்திரா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட்டு இதுவரை வென்ற வரலாறு இல்லை.

வைகோ முதல் மாணிக்கம் தாகூர் வரை!

இதுவரை நடந்த தேர்தல்களில் மதிமுகவின் வைகோ 1998 மற்றும் 1999 தேர்தல்களிலும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் 2009 மற்றும் 2014 தேர்தல்களிலும் வெற்றி பெற்று தேசிய அளவில் முக்கிய முகங்களாக உள்ளனர். 

செலிபிரெட்டி தொகுதியாக மாறிய விருதுநகர்!

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி செலிபிரெட்டி தொகுதியாக மாறி உள்ளது. திமுக கூட்டணி சார்பில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் கேப்டன் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார்.

பாஜக சார்பில் நடிகை ராதிகா வேட்பாளராக களம் இறங்கி உள்ளதால் செலிபிரிட்டி தொகுதியாக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி மாறி உள்ளது.

WhatsApp channel