தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Tamilisai: ’வலிமையான பிரதமர் வேண்டுமா! வாரவாரம் ஒரு பிரதமர் வேண்டுமா!’ விட்டு விளாசிய தமிழிசை சவுந்தராஜன்!

Tamilisai: ’வலிமையான பிரதமர் வேண்டுமா! வாரவாரம் ஒரு பிரதமர் வேண்டுமா!’ விட்டு விளாசிய தமிழிசை சவுந்தராஜன்!

Kathiravan V HT Tamil

Apr 28, 2024, 08:00 PM IST

”கேரளாவில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே சண்டை உள்ளது. பிரியங்கா காந்தி, பினராயி விஜயனை கிழிகிழி என்று கிழிக்கிறார். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது என மக்களுக்கு நன்றாக தெரியும்”
”கேரளாவில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே சண்டை உள்ளது. பிரியங்கா காந்தி, பினராயி விஜயனை கிழிகிழி என்று கிழிக்கிறார். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது என மக்களுக்கு நன்றாக தெரியும்”

”கேரளாவில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே சண்டை உள்ளது. பிரியங்கா காந்தி, பினராயி விஜயனை கிழிகிழி என்று கிழிக்கிறார். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது என மக்களுக்கு நன்றாக தெரியும்”

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க செல்வதற்கு முன்னர் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தாராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு நிதியும் உள்ளது. நீதியும் உள்ளது. ஸ்டாலின் கட்சி விபி.சிங் முதல் மன்மோகன் சிங் வரை மத்தியில் ஆண்ட போது கொடுத்த திட்டங்களைவிட பாரத பிரதமர் அதிக திட்டங்களை கொடுத்து உள்ளனர். சென்னை, திருச்சி விமான நிலையங்கள் உருவாக்கம், சென்னையில் முதியவர்களுக்கான மருத்துவமனைகள், மதுரை, திருச்சி, திருநெல்வேலியில் உயர் மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் கொடுத்து உள்ளார். மத்தியில் கூட்டணி ஆட்சி இருப்பதை விட தமிழ்நாட்டுக்கு பாரத பிரதமர் நீதி வழங்கி உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

PM Narendra Modi files nomination: வாரணாசி படித்துறையில் ஆரத்தி.. பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி

Fact Check: ரோட்ஷோவின் போது அகிலேஷ் யாதவ் மீது காலணிகள் வீசப்பட்டதா.. உண்மையில் நடந்தது என்ன?

Srinagar records highest voter turnout: ஸ்ரீநகரில் 1998-க்குப் பிறகு அதிக வாக்குகள் பதிவு

நிதியை பொறுத்தவரை வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணத்தை கணக்கீடு செய்ய விதிகள் உள்ளது. அதன்படிதான் நிதி கொடுத்து உள்ளார்கள். மத்தியில் நல்லாட்சி நடந்து, மறுபடியும் நல்லாட்சி வர உள்ள நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் இதை சொல்கிறார். 

தேர்தலில் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பது எப்படி தெரியும். சும்மா இவர்களாகவே பொய் பிரச்சாரத்தை பரவவிட்டுக் கொண்டு இருக்கின்றனர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்ததில் காங்கிரஸ் கட்சியைவிட ஸ்டாலின் அதிக உரிமை கொண்டாடுகிறார். 

இதற்கு  முன்னாள் தமிழ்நாட்டுக்கு என்ன திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தீர்கள். இதே சிதம்பரம் இத்தனை ஆண்டுகாலம் தமிழ்நாட்டுக்கு நிதியமைச்சராக இருந்து குறிப்பிட்ட ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தோம் என சொல்லட்டும் பார்க்கலாம். 

நடந்து முடிந்த 2 கட்ட தேர்தல்களிலும் பாரத பிரதமர் முன்னிலையில்தான் உள்ளார். தோல்வி பயத்தால் இதை அவர்கள் சொல்லாம். இந்த நாடு வலிமையான பிரதமரை கொண்டு இருக்க வேண்டும், வாரத்திற்கு ஒரு பிரதமர் இருக்க கூடாது. பாஜகவால் மட்டும்தான் வலிமையான பிரதமரை கொடுக்க முடியும். இவர்களால் பிளவுபட்ட பாரதத்தைத்தான் கொடுக்க முடியும். 

கேரளாவில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் இடையே சண்டை உள்ளது. பிரியங்கா காந்தி, பினராயி விஜயனை கிழிகிழி என்று கிழிக்கிறார். இவர்களால் எதையும் சாதிக்க முடியாது என  மக்களுக்கு நன்றாக தெரியும். 

மரியாதைக்குரிய பாரத பிரதமர் எந்த வெறுப்பு அரசியலையும் செய்யவில்லை. 2016 முதல் 2020 வரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு தராத பல்வேறு திட்டங்களை கொடுத்து உள்ளார். இதுவரை எந்த பிரதமரும், சிறுபான்மையினருக்காக இப்படி பாடுபடவே இல்லை. ஆனால் இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், தோல்வி பயத்தால் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சி அதற்கு செவிசாய்க்கவே இல்லை. நாம் எதை சொல்ல நினைக்கிறோமோ அதைத்தான் தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும் என நினைப்பது அவசியம் கிடையாது. 

மணிப்பூரில் தேர்தல் சுமூகமாக நடைபெற்று உள்ளது. மணிப்பூரில் பல உள் விவகாரங்கள் உள்ளது. இவை சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாகவும் உள்ளது. 

அரசு அதிகாரிகள் வீட்டிலேயே போதை பொருட்கள் வைக்க உதவி செய்துள்ளது. கண்ணகி நகரில் பெண்கள் வைத்த முதல் கோரிக்கை கஞ்சா போதை பழக்கம் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான். திமுகவும்-சாதிக்கும் இதில் பெரிய கூட்டணி போட்டு இருந்தார்கள். போதை பழக்கத்தில் இளைஞர்கள் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றனர். 

வேங்கைவயலுக்கே இன்னும் பதில் கிடைக்காத நிலையில், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டுச்சாணத்தை கலந்து உள்ளனர். 

பாஜகவினருக்கு தோல்வி பயம் வரவில்லை, வெற்றி களிப்பில் சென்று கொண்டு இருக்கிறோம்.

அடுத்த செய்தி