தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Election 2024: ’முஸ்லீம்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் உரிமையை தர காங்கிரஸ் திட்டம்!’ உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆவேசம்!

Election 2024: ’முஸ்லீம்கள் மாட்டிறைச்சி சாப்பிடும் உரிமையை தர காங்கிரஸ் திட்டம்!’ உ.பியில் யோகி ஆதித்யநாத் ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Apr 26, 2024 08:49 PM IST

”காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஒருவரின் வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அவற்றில் இரண்டு அறைகளை அவர்கள் எடுத்து கொள்வார்கள் ”

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ட்ரெண்டிங் செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலம் மொராடாபாத்தில் பேசிய அவர், "இந்த வெட்கம் கெட்டவர்கள் பசுவின் இறைச்சியை சாப்பிடும் உரிமையை வழங்குவதாக உறுதி அளிக்கிறார்கள், ஆனால் எங்கள் சாஸ்திரங்கள் பசுவை தாய் என்று அழைக்கின்றன. அவர்கள் பசுக்களை கசாப்புக் கடைக்காரர்களின் கைகளில் கொடுக்க விரும்புகிறார்கள். இதை இந்தியா ஏற்குமா? என யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார். 

சிறுபான்மையினர் தாங்கள் விரும்பும் உணவை சாப்பிடுவதற்கான சுதந்திரத்தை வழங்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். 

சம்பல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பரமேஷ்வர் லால் சைனிக்கு ஆதரவு திரட்டுய ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய உரைகளை மேற்கோள்காட்டி பேசினார். ’பெண்களின் செல்வத்தை பறிமுதல் செய்து ரோஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்று குற்றம் சாட்டினார். 

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ஒருவரின் வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அவற்றில் இரண்டு அறைகளை அவர்கள் எடுத்து கொள்வார்கள். அது மட்டுமல்ல, பெண்களின் நகைகளை கையகப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என்று அவர் கூறினார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் 2004 முதல் 2014 வரை அவர்கள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டனர் என்று ஆதித்யநாத் கூறினார். 

கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவர்கள் முயற்சித்தனர். 

சச்சார் கமிட்டி பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய அவர், எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஓ.பி.சி.யினருக்கான இட ஒதுக்கீட்டில் 6 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி அதை அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என்றார். 

காங்கிரஸை இரட்டை நிலைப்பாடு கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக கூறினார். 

நாட்டை மேலும் பிரிக்க காங்கிரஸ் சதி செய்வதாக கூறிய அவர், "காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை வைத்திருந்தபோது, அவர்கள் ராமரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் எல்லோருக்குமானது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு" என்று அவர் கூறினார். 

'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று கோஷமிட தயங்குபவர்களுக்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். 

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்து உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று நடைபெற்றது. மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

WhatsApp channel