தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bjp: ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

BJP: ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

Apr 26, 2024 03:34 PM IST Karthikeyan S
Apr 26, 2024 03:34 PM IST
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து, திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிச்குமார், செயலாளர் சின்னச்சாமி உள்ளிட்ட நால்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, போஸ்டர் ஒட்டிய சில மணி நேரங்களிலேயே அதனை அனைத்தையும் கிழித்தெறிந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
More