தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Vanathi Vs Suve: ’மதுரையில் தருமியை வைத்து வம்பிழுத்த வானதி!’ தனது பாணியில் பதிலடி தந்த சு.வெங்கடேசன்!

Vanathi Vs Suve: ’மதுரையில் தருமியை வைத்து வம்பிழுத்த வானதி!’ தனது பாணியில் பதிலடி தந்த சு.வெங்கடேசன்!

Kathiravan V HT Tamil

Apr 02, 2024, 09:14 PM IST

”தருமி என்ற கதாப்பாத்திரம் திருவிளையாடலில் வரும். அந்த தருமி சொல்வார் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்று, அதை போல இந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்”
”தருமி என்ற கதாப்பாத்திரம் திருவிளையாடலில் வரும். அந்த தருமி சொல்வார் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்று, அதை போல இந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்”

”தருமி என்ற கதாப்பாத்திரம் திருவிளையாடலில் வரும். அந்த தருமி சொல்வார் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்று, அதை போல இந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்”

குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் தருமியாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்த நிலையில், தனது பாணியில் பதிலடியை சு.வெங்கடேசன் கொடுத்துள்ளார்.  

ட்ரெண்டிங் செய்திகள்

Cow Protection: ’மோடி மீண்டும் வென்றால் பசுவை கொலை செய்பவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம்’ பீகாரில் அமித்ஷா ஆவேசம்!

Fact Check: ரவீந்திரநாத் தாகூரின் உருவப்படத்தை பிரதமர் மோடி தலைகீழாக வைத்திருந்தாரா?

Mamata Banerjee Vs Modi: ’பாஜக 200ஐ தாண்டாது! இந்தியா கூட்டணி 300ஐ தாண்டும்!’ அடித்து சொல்லும் மம்தா! இதுதான் காரணமாம்!

Modi: கார் இல்லை! நிலம் இல்லை! கடன் இல்லை! பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இதுதான்! மனைவி குறித்தும் மனம் திறந்தார்!

நாடாளுமன்றத் தேர்தல் 2024

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டில் பரப்புரை களம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. 

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மதுரை தொகுதி!

மதுரை நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் சரவணன், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் அன்பரசி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். 

மதுரையில் போட்டியிடும் பேராசிரியர் சீனிவாசனை ஆதரித்து மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பேராசிரியர் சீனிவாசனை ஆதரித்து அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், ”மதுரையில்தான் திருவிளையாடல் புராணத்தை பார்த்தோம். தருமி என்ற கதாப்பாத்திரம் திருவிளையாடலில் வரும். அந்த தருமி சொல்வார் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்று, அதை போல இந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர். குற்றம் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு எம்பி வேண்டுமா? உண்மையான குற்றச்சாட்டு இருந்தலும் பரவாயில்லை; பொய்யாக குற்றம்சாட்டு சொல்ல உங்களுக்கு ஒரு எம்.பி வேண்டுமா?” என கேள்வி எழுப்பி இருந்தார். 

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய மதுரை நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், “நேற்று மதுரைக்கு வந்து பிரச்சாரம் செய்த வானதி சீனிவாசன், ’என்னை தருமியை போல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பவர். அவரையா எம்.பியாக தேர்வு செய்ய போகிறீர்கள்’ என்று பேசி உள்ளார். 

மரியாதைக்குரிய வானதி சீனிவாசன் அவர்களே! தருமியின் பக்கம்தான் இறைவனே நின்றான் என்பதுதான் மதுரையின் வரலாறு. அதிகாரத்தில் உள்ளவர்கள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று பேசினால் அந்த அதிகாரத்திற்கு எதிரான தருமியின் குரல் இறைவனின் குரலாக எதிரொலித்ததுதான் மதுரை மண். 

எனவே அதிகாரத்தை கேள்வி கேட்கும் இடத்தை ஒரு போதும் மதுரை விட்டுத்தராது. இது மதுரையின் குரல், தமிழகத்தின் குரல்! தாய் தமிழின் குரல்! பாசிச பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணியின் நல்லாட்சி தொடர சு.வெங்கடேசன் ஆன எனக்கு அறிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களியுங்கள்” என சு.வெங்கடேசன் பேசினார்.

அடுத்த செய்தி