’இந்திய நாடாளுமன்றத் தேர்தல்!’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் இதோ!

By Kathiravan V
Apr 01, 2024

Hindustan Times
Tamil

உலகின் மிகப்ப்ரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 6 வாரங்கள் நடத்தப்பட்டு வரும் ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த வாக்குப்பதிவு 10 லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு கட்ட தேர்தல் வாக்குப்பதிவும் ஒரு நாள் வரை நீடிக்கும், பல மாநிலங்களில் உள்ள பல தொகுதிகளில் அன்று வாக்குப்பதிவு நடைபெறும். 

மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 412 தொகுதிகள் பொது வேட்பாளர்களுக்கும், 84 தொகுதிகள் எஸ்சி பிரிவினருக்கும், 47 தொகுதிகள் பழங்குடியினர் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் இந்த தேர்தலில் 96.8 கோடி குடிமக்கள் வாக்களிக்க உள்ளதாக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறி உள்ளார். 

தகுதி பெற்ற 97.8 கோடி வாக்காளர்களில் 49.72 கோடி ஆண் வாக்காளர்கள் ஆவார்

உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அடுத்த ஐந்து வருட காலத்திற்கு பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கு 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்

இந்தியாவின் தேர்தல் முறை என்பது பலகட்சி அமைப்புகளை சார்ந்ததாக உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க ஒரு கட்சியோ அல்லது ஒரு கூட்டணியோ 272 இடங்களைப் பெற வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் அவரது முக்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரஸின் ராகுல் காந்தி ஆகியோர் இந்த தேர்தலின் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் பல்வேறு மாநிலக் கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களையும், பாஜக மட்டும் 370 இடங்களையும் பெற்று ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் கூறுகின்றனர்

யுஸ்வேந்திர சஹல் வரலாறு படைத்தார்