தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ’தாக்கு பிடிப்பாரா டி.ஆர்.பாலு!’ ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கள நிலவரம் இதோ!

HT MP Story: ’தாக்கு பிடிப்பாரா டி.ஆர்.பாலு!’ ஸ்ரீபெரும்புதூர் தொகுதி கள நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil

Apr 08, 2024, 06:00 AM IST

google News
S
S

S

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தோம். அந்த வரிசையில் HT MP Story என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களின் பின்னணி குறித்து அலசுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. 

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட தொகுதிகளை உள்ளடக்கியதாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. 

அதிக முறை வென்ற திமுக!

இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 

மூன்று முறை வென்ற மரகதம் சந்திரசேகர்!

காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் 3 முறையும், திமுகவின் கிருஷ்ணசாமி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் தலா இரண்டு முறையும் வெற்றி பெற்று உள்ளனர். 

அமோக வெற்றி பெற்ற டி.ஆர்.பாலு!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 793,281 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் 2,85,326 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீதர் 1,35,525 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் மகேந்திரன் 84,979 வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தாம்பரம் ஜி.நாராயணன் 41,497 வாக்குகளையும் பெற்று இருந்தனர். 

தற்போது யார்?

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு  போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜி.பிரேம் குமார், பாஜக கூட்டணியில் சார்பில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் வி.என்.வேணுகோபால், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் வி ரவிச்சந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.

களம் யாருக்கு?

மோடி அரசின் மீதான எதிர்ப்பு, கூட்டணி பலம், திமுக அரசின் திட்டங்கள், பரிட்சியமான முகம் உள்ளிட்டவை திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலுவின் பலமாக உள்ளது. தொகுதியில் உள்ள 6 தொகுதிகளிலும் முறையான மக்கள் தொடர்பு இல்லை என்ற விமர்சனமும் அவர் மீது உள்ளது. 

ஆளும் திமுக அரசின் மீதான அதிருப்தி, கட்சி கட்டமைப்பு உள்ளிட்டவை அதிமுக வேட்பாளர் பிரேம் குமாருக்கு பலமானதாக உள்ளது. 

மீண்டும் மோடி என நினைப்பவர்களின் தேர்வாக தமாகா வேட்பாளர் வேணுகோபால் உள்ளார். 

திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்று எதிர்பார்போர், முதல் முறை வாக்காளர்கள் உள்ளிட்டவை நாம் தமிழர் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. 

அடுத்த செய்தி