தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ’திமிறி எழுவாரா திருமா!’ சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம் இதோ!

HT MP Story: ’திமிறி எழுவாரா திருமா!’ சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil

Apr 16, 2024, 06:15 AM IST

google News
”இளையபெருமாள், தலித் எழில்மலை, இ.பொன்னுசாமி, திருமாவளவன் ஆகியோர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற முக்கிய எம்.பிக்கள் ஆவார்”
”இளையபெருமாள், தலித் எழில்மலை, இ.பொன்னுசாமி, திருமாவளவன் ஆகியோர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற முக்கிய எம்.பிக்கள் ஆவார்”

”இளையபெருமாள், தலித் எழில்மலை, இ.பொன்னுசாமி, திருமாவளவன் ஆகியோர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற முக்கிய எம்.பிக்கள் ஆவார்”

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்டது. நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வந்தோம். அந்த வரிசையில் HT MP Story என்ற தொடர் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களின் பின்னணி குறித்து அலசுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி!

2009ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உள்ளது. 

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார் கோயில், மங்களூர், விருத்தாசலம் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி இருந்தது.

அதிக முறை வென்ற காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும், பாமக 3 முறையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 முறையும் வெற்றி பெற்று உள்ளது. 

கவனம் பெற்ற எம்பிக்கள்!

இளையபெருமாள், தலித் எழில்மலை, இ.பொன்னுசாமி, திருமாவளவன் ஆகியோர் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற முக்கிய எம்.பிக்கள் ஆவார். 

கடும்போட்டிக்கு மத்தியில் வென்ற திருமா!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 500,229 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

அதிமுக வேட்பாளர் பி.சந்திரசேகர் 4,97,010 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் அ.இளவரசன் 62,308 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் ஜீவஜோதி 37,471 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யத்தின் டி.ரவி 15,334 வாக்குகளையும் பெற்று இருந்தனர். நோட்டாவுக்கு 15,535 வாக்குகள் கிடைத்து இருந்தது. 

தற்போது யார்?

தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விசிக தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் மு.சந்திரஹாசன், பாஜக சார்பில் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்.ஜான்சிராணி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 

களம் யாருக்கு?

மோடி அரசின் மீதான அதிருப்தியும், திமுகவின் கூட்டணி பலமும், சொந்த சொல்வாக்கும், திருமாவளவனுக்கு பலமாக இருக்கும். பானை சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் சவால்களும் உள்ளது. 

கட்டமைப்பு பலமும், திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியும் அதிமுகவுக்கு வலு சேர்க்கும். 

மோடி அரசின் மீதான ஆதரவு மனப்பான்மை கொண்டோரின் வாக்குகளும், பாமகவின் கூட்ட்ணியும் பாஜகவுக்கு சாதகம். 

முதல் முறை வாக்காளர்களின் ஆதரவு நாம் தமிழருக்கு பலமாக அமையும்.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த செய்தி