தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thirumavalavan: உளவியல் ரீதியாக நெருக்கடி..It ரெய்டு குறித்து திருமாவளவன் காட்டம்!

Thirumavalavan: உளவியல் ரீதியாக நெருக்கடி..IT ரெய்டு குறித்து திருமாவளவன் காட்டம்!

Karthikeyan S HT Tamil
Apr 10, 2024 09:42 AM IST

Income Tax Raid: சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

திருமாவளவன்
திருமாவளவன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் கடலூர் பிரிவு வருமான வரித்துறை உதவிஆணையர் பாலமுருகன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அங்குசென்று, வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர். குறிப்பாக திருமாவளவன் தங்கி இருக்கும் அறையை நீண்டநேரம் சோதனை செய்தனர். சுமார் 2.30 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் பணமோ ஆவணமோ கைப்பற்றியதாக தகவல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால், முருகானந்தன் விசிகவில் என்ன பொறுப்பில் இருக்கிறார் என்பது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட்னர். மேலும், வருமான வரித்துறை அலுவலகத்தில் முருகானந்தன் இன்று ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறு. வருமான வரி சோதனையின்போது, திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் பிரச்சாரத்தில் இருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் வருமான வரித்துறையோ, அமலாக்கத்துறையோ இப்படி சோதனை நடத்தியதாக சான்றுகள் இல்லை. அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு வேட்பாளர் தங்கியிருக்கும் வீட்டில் எந்த முகாந்திரமும் இன்றி வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இதனை ஒரு அச்சுறுத்தலாகவே கருதுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த 5 ஆம் தேதி அன்று தொடங்கிய வருமான வரி சோதனை 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த சோதனை திங்கட்கிழமை இரவுடன் முடிவடைந்துள்ளது.

அரசியல் பிரமுகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர்களின் வீடுகளில் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கட்டு கட்டாக கோடிக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரிலேயே வருமானவரித்துறையினர் இந்த சோதனையை நடத்தி இருந்தனர்.

இதற்கிடையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கைப்பற்றப்பட்ட ரூ.3.98 கோடி பணம் தாம்பரம் சார்நிலை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும், பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point