தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Ht Mp Story: ‘அதிமுகவுக்கு சாதகமாகிறதா திருப்பூர்!’ திருப்பூர் தொகுதி கள நிலவரம் இதோ!

HT MP Story: ‘அதிமுகவுக்கு சாதகமாகிறதா திருப்பூர்!’ திருப்பூர் தொகுதி கள நிலவரம் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 15, 2024 06:50 AM IST

”இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 8 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது”

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கள நிலவரம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி!

கோபிச்செட்டிபாளையம் தொகுதியாக அறியப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி 2009 ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியாக மாறியது. 

பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச் செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பூர் மக்களவை தொகுதி உள்ளது. 

அதற்கு முன்னதாக கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானி சாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. 

அதிக முறை வென்ற அதிமுக!

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக 8 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.

வெற்றி பெற்ற முக்கிய எம்.பிக்கள்!

டி.எஸ்.அவிநாசி லிங்கம் செட்டியார், பி.ஜி.கருத்திருமன், ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் இங்கு வெற்றி பெற்ற முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். 

அமோக வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுப்பராயன் 508,725 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் 4,15,357 வாக்குகளை பெற்றார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வி.எஸ்.சந்திரகுமார் 64,657 வாக்குகளையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் 43,816 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகன்நாதன் 42,189 வாக்குகளையும் பெற்று இருந்தனர். 

தற்போது யார்?

தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சிட்டிங் எம்.பி சுப்பராயன் போட்டியிடுகிறார். 

அதிமுக சார்பில் பி.அருணாச்சலம், பாஜக சார்பில் ஏ.பி.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சும் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 

களம் யாருக்கு?

மோடி அரசின் மீதான அதிருப்தியும், திமுக கூட்டணியின் பலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனுக்கு சாதகமாக அமையலாம். அதிமுகவின் கட்டமைப்பு பலமும். திமுக அரசின் மீதான அதிருப்தியும் அதிமுகவுக்கு வலு சேர்க்கும். 

மோடி ஆதரவு மனநிலை கொண்ட மக்களின் வாக்குகள் பாஜகவுக்கு பலமாக இருக்கும். தேசிய மற்றும் திராவிட கட்சிகளுக்கு மாற்று எதிர்பார்ப்போர், முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு பலமாக அமையும். 

WhatsApp channel