தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Zim 4th T20: முக்கிய விக்கெட்டை தூக்கிய சிஎஸ்கே பவுலர்! கடைசி 5 ஓவரில் அசுர வேட்டை ஆடிய ஜிம்பாப்வே

Ind vs Zim 4th T20: முக்கிய விக்கெட்டை தூக்கிய சிஎஸ்கே பவுலர்! கடைசி 5 ஓவரில் அசுர வேட்டை ஆடிய ஜிம்பாப்வே

Jul 14, 2024, 04:22 PM IST

google News
சிறப்பாக பேட் செய்து ரன் குவித்து வந்து ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா விக்கெட்டை தூக்கினார் சிஎஸ்கே பவுலர் துஷார் தேஷ்பாண்டே. கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் அசுர வேட்டை ஆடிய ஜிம்பாப்வே, 152 ரன்கள் குவித்துள்ளது. (AP)
சிறப்பாக பேட் செய்து ரன் குவித்து வந்து ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா விக்கெட்டை தூக்கினார் சிஎஸ்கே பவுலர் துஷார் தேஷ்பாண்டே. கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் அசுர வேட்டை ஆடிய ஜிம்பாப்வே, 152 ரன்கள் குவித்துள்ளது.

சிறப்பாக பேட் செய்து ரன் குவித்து வந்து ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா விக்கெட்டை தூக்கினார் சிஎஸ்கே பவுலர் துஷார் தேஷ்பாண்டே. கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் அசுர வேட்டை ஆடிய ஜிம்பாப்வே, 152 ரன்கள் குவித்துள்ளது.

ஜிம்பாப்வே - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்காவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ஸ்ட் கிளப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை கைப்பற்றும். அதேநேரத்தில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் தப்பிக்க முடியும். எனவே இரு அணிகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது. 

இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் இளம் பவுலரான துஷார் தேஷ்பாண்டே சேர்க்கப்பட்டார். அவர் இந்தியாவுக்காக டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அதேபோல் ஜிம்பாப்வே அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 

இந்தியா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சிகந்தர் ராசா 46, தடிவானாஷே மருமணி 32, வெஸ்லி மாதேவேரே 25 ரன்கள் அடித்தார்கள்.

இந்திய பவுலர்களில் கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். துஷார் தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, ஷிவம் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

நல்ல தொடக்கம்

ஜிம்பாப்வே அணியின் ஓபனர்களான வெஸ்லி மாதேவேரே - தடிவானாஷே மருமணி ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 63 ரன்கள் சேர்த்தனர்.

முதல் விக்கெட்டாக தடிவானாஷே மருமணி அவுட்டானார். இவரது விக்கெட்டை அபிஷேக் ஷர்மா வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே இன்னொரு ஓபனரான வெஸ்லி மாதேவேரே, இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவிடம் சிக்கினார்.

சிகந்தர் ராசா அதிரடி

அணியின் கேப்டனான சிகந்தர் ராசா தொடக்கத்தில் இருந்தே அதிரடி மோடில் விளையாடினார். பவுண்டரி, சிக்ஸர் என விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட அவர் 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

முக்கிய விக்கெட்டான இவரை அறிமுக வீரரும், சிஎஸ்கே பவுலருமான துஷார் தேஷ்பாண்டே சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார்.

கடைசி கட்டத்தில் அதிரடி

ஒற்றை ஆளாக சிகந்தர் ராசா வெளிப்படுத்திய அதிரடியாக கடைசி கட்டத்தில் ஜிம்பாப்வே அணி ரன் குவித்தது. ஆட்டத்தின் கடைசி 5 ஓவரில் 54 ரன்கள் எடுத்தது.

நல்ல தொடக்கம் அமைத்த அணியின் ரன் வேகத்தை இந்திய பவுலர்கள் மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்தினர். இருப்பினும் கடைசி நேர அதிரடியால் சவாலான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

பிஷ்னோய் சிக்கனம்

இந்திய பவுலர்களில் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை. இருப்பினும் சிக்கனமாக அவர் பவுலிங் செய்தார். 4 ஓவரில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இந்திய பவுலர்களில் அதிகமாக 11 டாட் பந்துகளை வீசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி